தமிழ் சீரியல்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? நம்ம கயலுக்கு கூட இவ்ளோ இல்லையாமே!
சென்னை: சீரியல் நடிகைகளிலேயே புதுமுக நடிகைதான் அதிக ஊதியம் பெறுகிறாராம். அதிலும் ஒரு நாளைக்கு ரூ 1 லட்சமாம். நம்ம கயலுக்குக் கூட அவ்வளவு சம்பளம் கிடையாதாம். தினமும் லட்சாதிபதியாகும் அந்த நடிகை யார் என்பதை பார்க்கலாம்.
இப்போதெல்லாம் ஃபேமஸாக வேண்டுமானால் சமூகவலைதளங்களில் டிரென்ட்டானால் போதும். அப்படியே சீரியல் அங்கிருந்து சினிமா என நம் இலக்கை அடைந்துவிடலாம். சீரியல், சினிமா இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ஆவணப்படங்கள், வெப் சீரிஸிலாவது நடிக்கலாம்.

இதற்கு உதாரணம் மிருணாளினி ரவி. மேலும் ஜிபி முத்துவும் கூட கடைத் திறப்பு விழாக்கள், ஆவணப்படங்களில் நடித்து வருகிறார். அது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அது போல் சினிமா நடிகர், நடிகைகளுக்கு இருப்பதை போல் சீரியல் கலைஞர்களுக்கும் ஃபேன் பேஸ் இருக்கிறார்கள். இவர்களை இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்டவைகளில் பாலோ செய்கிறார்கள். அவர்களது யூடியூப் சேனல்களையும் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள்.

இந்த பாப்புலாரிட்டியை வைத்தே சில சீரியல் நடிகைகள் கவரிங் நகை விற்பது, ஜவுளி விற்பனை, மசாலாக்கள் விற்பது என இறங்கிவிட்டனர். சினிமாக்களை போல் சீரியல் ஹீரோயின்களுக்கும் மவுசு கூடியுள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகைகளிலேயே ஒரு நடிகைதான் அதிகம் ஊதியம் வாங்குகிறார். அவர் யாரென தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.
அவர் வேறு யாருமில்லை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் சுவாதி கொண்டே. ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் ஊதியம் பெறுகிறாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இவர் மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமியின் தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஈரமான ரோஜாவே தொடரில் நடித்திருந்தார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். கன்னட சினிமா மூலம் அறிமுகமான இவர் இதுவரை 4 கன்னட சினிமாக்களில் நடித்துள்ளார். அத்துடன் கன்னட சீரியலிலும் நடித்துள்ளார். இதன் மூலம்தான் அவருக்கு தமிழில் ஈரமான ரோஜாவே சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் அவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இரண்டாம் பாகத்திலும் அவர் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருந்து இவருக்கு 3 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இவருக்கு பெயிண்டிங் என்றால் மிகவும் பிடிக்குமாம். அது போல் எல்லா மொழி திரைப்படங்களிலும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம்.

சுவாதி கொண்டேதான் சீரியல் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குகிறாராம். எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நம்ம ஜ(ச)னனி கூட ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் ஊதியமாக வாங்கி வந்தாராம். அது போல் சுந்தரி சீரியல் நாயகி கேப்ரில்லா ஒரு நாளைக்கு ரூ 35 ஆயிரமும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு ரூ 22 ஆயிரமும் இனியா சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா ஒரு நாளைக்கு ரூ 25 ஆயிரமும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கேரக்டரில் நடிக்கும் மனீஷா மகேஷ் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ 17 ஆயிரம் ஊதியமாக பெற்று வருகிறாராம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications