காஸ்ட்லியான BMW கார்.. டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வந்த பரிசு.. கொடுத்தது யார்?
சென்னை: மே 1ம் தேதி சூர்யா நடித்த 'ரெட்ரோ' படத்துடன் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு பலர் நடித்திருந்தனர். யுவராஜ் கணேசன் தயாரித்து, அவரே தமிழகத்தில் வெளியிட்டார். இந்த சின்னப் படத்துக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார் என்று பலரும் அப்போது பேசினார்கள். ஆனால், படத்தின் வெற்றியே அதற்கான காரணத்தை நிரூபித்திருந்தது. இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி பட டைரக்டர் பற்றின செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் டைரக்ஷனில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே 1ம் தேதி வெளிவந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி...

அமோக வரவேற்பு
ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் ரிலீஸானதிலிருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது இந்த படம்..
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்னைக்கு வந்து சந்திக்கும் சவால்களை, சிக்கல்களை காமெடி கலந்து சொல்லியிருந்தார், இந்த படத்தை பார்த்து பல்வேறு பிரபலங்கள் வியந்து பாராட்டினார்கள்..
ஹை பட்ஜெட் படம்
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஒரு யூடியூப் சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "புலம்பெயர்ந்து வாழ்வது என்றாலும், குடும்பமாக வாழ்வதற்கும், பேச்சிலராக வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது... புலம்பெயர்ந்து வந்து இங்கு பழகும்போது, சின்ன சின்ன விஷயங்களையும் , நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் அபிஷன் ஜீவிந்த்.
ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் பல படங்கள் இங்கே மண்ணை கவ்வும்போது, இந்த படம் அமைதியாக உள்ளது.. பல வருடங்கள் கழித்து, குழந்தைகளுடன் பலரும் தியேட்டர்களுக்கு செல்வதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மண்ணை கவ்வும்போது, குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நடிகர், நடிகைகளை வைத்து நுணுக்கமான, மென்மையான விஷயங்களை 24 வயதே ஆன இயக்குநனர் அபிஷன் ஜீவிந்த் பதிவு செய்திருக்கிறார்.. அனைத்து விருதுகளுக்கும் தகுதியுடைய படம்" என்று உயர்வாக பேசியிருந்தார்.
டூரிஸ்ட் ஃபேமிலி
அதேபோல பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேறொரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "1000 கோடி எடுக்கணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க, அதுக்கேத்த கதை வேணும்தானே? 500 கோடியில் தக் லைஃப் படத்தை எடுத்துவிட்டு , அதில் தம்மாத்துண்டு கதையைகூட காணோம்.. ஆனால், வெறும் 4 கோடியில் எடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி இப்போதே 75 கோடி ரூபாய் வசூலிக்கிறது.. இது 1000 கோடி வசூலித்ததற்கு சமமாகும்" என்று புகழ்ந்து பேசியிருந்ததை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
அந்தவகையில் அனைவருமே எதிர்பார்த்ததுபோல, 2025ம் வருடங்களிலேயே அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலி இடம்பெற்று விட்டது. அதாவது, வெறும் 7 கோடி ரூபாயில் உருவான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம், சுமார் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த இந்தியப் படமாக சாதனை படைத்திருக்கிறது.
உலக சாதனை படம்
7 கோடியில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் கிடைத்த லாபம் மட்டுமே ரூ.90 கோடியாகும்.. அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதம் அதிகமாகும்..
2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படமும் இப்படியான வசூல் சாதனையை பிடித்தது இல்லை என்கிறது சாக்நில்க் என்ற நிறுவனம். இந்த நிறுவனம், திரைப்படங்களின் தரவுகள் பற்றிய விவரங்களை வெளியிடும் ஒரு நிறுவனம் ஆகும். 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டதை மறுக்க முடியாது.
கல்யாணம் அபிஷன் ஜீவின்ந்த்துக்கு
இதனால் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்து, எத்தகைய படத்தை தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எழுந்தது.. ஆனால், அவரே ஹீரோவாக அறிமுக போகிறாராம்.. படத்தை டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை இயக்குநர் மதன் டைரக்ட் செய்ய போகிறார். படத்தின் ஹீரோயினாக அனஸ்வர ராஜன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து, சமீபத்தில் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வருகிற 31-ந் தேதி அபிஷன் ஜீவின்ந்த்க்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது.. அவருக்கு டூரிஸ்ட் பேமிலி படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளார். இந்த கிப்ட்தான் கோடம்பாக்கத்தின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications