இலங்கையில் 25 ஆயிரம் ஏழைகளுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுகிறாரா ரம்பா கணவர்? இந்திரக்குமார் யார்?
சென்னை: இலங்கையில் 25 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் செலுத்தி வருகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்கிறார்கள். எனினும் ரம்பாவின் கணவர் என்பதை தாண்டி இந்திரகுமார் இப்படி பிரபலமடைந்து வருகிறார் என்றால் அவர் யார் என்பதை பார்க்கலாம். அவர் யாழ்ப்பாணத்திற்கு வேறு என்ன உதவிகளை செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
1993 ஆம் ஆண்டு "உழவன்" என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் ரம்பா. இவரை தொடையழகி என அழைப்பார்கள். இவர் "உள்ளத்தை அள்ளித்தா" எனும் படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கிவிட்டார்.

2019ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்திரக்குமார் பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருக்கிறார். இவர் நம்பர் ஒன் பிசினஸ் மேனாக இருந்து வருகிறார்.
3 குழந்தைகள்
திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளானதும் ரம்பாவும் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் ஜோடி ஆர் யூ ரெடி எனும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார் ரம்பா. பெரிய ஸ்டாருடைய கணவர் என்பதை தாண்டி இந்திரக்குமார் குறித்து பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
25 ஆயிரம் ஏழை குழந்தைகள்
இலங்கையில் 25 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை தானே செலுத்தி வருகிறார் இந்திரக்குமார் என செய்திகள் வெளியாகின. ஆனால் இவை தவறு என சொல்லப்படுகிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் கல்லூரி கட்டணம் எல்லாம் கிடையாது, இலவச கல்விதான் என்கிறார்கள்.
இந்திரக்குமார்
எனினும் இந்திரக்குமார் பெயர் அவ்வப்போது உச்சரிக்கப்படுவதற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் தயாரிக்கும் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரம்பா இந்திரக்குமார்
இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இந்த நிகழ்வுக்கு பிறகு இந்திரக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 2018ஆம் ஆண்டு குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தோம். அப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தோம்.
நிறைய பணம்
நிறைய பணம் சம்பாதிச்சு பயனில்லை. அதை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். உடனே ரம்பா, "நான் நம் பிள்ளைகளை பார்த்துக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் போய் அங்குள்ள பிள்ளைகளை பாருங்கள்" என சொன்னார்.
வடக்கு இலங்கை
இதனால் வடக்கு இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு அரசு பல்கலைக்கழகத்தில் மிக குறைந்த இடங்களே இருப்பதால் இலங்கையில் SLIIT Northern Uni ஆரம்பித்தோம். மேலும் வேலை வாய்ப்புகளுக்காக ஐடி நிறுவனங்களையும் தொடங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தத்தால் இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியில் மாற்றம் உண்டாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செயற்கைக் கை பொருத்திய இந்திரக்குமார்
அது போல் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் ஒற்றை கையுடன் ஆதிரா நடனமாடி வந்தார். அவருக்கு செயற்கைக் கை பொருத்த ரம்பாவின் கணவர் இந்திரக்குமார் உதவி செய்துள்ளார். இதுகுறித்து இந்திரக்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் ரோட்டில் இறங்கி நடக்கவே கஷ்டப்படுவார்கள். ஆனால் ஆதிரா, ஸ்டேஜில் வந்து ஆடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications