Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த நேரத்துல இப்படி போட்டோ போடலாமா?.. சிங்கிள்ஸ்களை கதற விடும் நந்தினி நித்யா ராம்!

Subscribe to Oneindia Tamil

செனனை: நந்தினி சீரியல் நித்யா ராம் போட்ட ஒரு போட்டோ வைரலாகியுள்ளது. சிங்கிள்ஸ்களை எல்லாம் சிதற விட்டுக் கொண்டிருக்கிறது அந்த போட்டோ.

கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். நித்தியா ராம். இவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தான் தனது நடிப்பை தொடங்கினார். அவர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி.

2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். நித்யா ராம் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். அவரது தந்தை கே எஸ் ராமு மற்றும் சகோதரி ரசித்தா ராம் ஆகியோர் கிளாசிக்கல் நடன கலைஞர்களாக உள்ளனர்.

நித்யாவுக்கு டான்ஸ் சூப்பரா வரும்.. அத்தோடு படிப்பிலும் கில்லியாம். உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறார். கொஞ்சகாலம் ஒரு கம்பெனில வேலை பார்த்தார் .ஆனா அவரோட கனவு, கதாநாயகியாக ஆவதுதான்.. எனவே அந்தக் கனவின் பக்கமே மனசு அலை பாய்ந்து வந்ததால் வேலையா விட்டு விட்டார்.

 கன்னட சீரியல்கள்

கன்னட சீரியல்கள்

அதன்பிறகுதான் கன்னட தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவரும் அவரது சகோதரியும் இணைந்து சில நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார்கள் .அந்த டைம்ல கன்னடத்திலும் தெலுங்கிலும் பிஸியாக நடித்து இருக்கிறார். அப்போதான் சன் டிவியிலிருந்து நந்தினி சீரியலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் மிக பிரம்மாண்ட அளவிலான எடுக்கப்பட்டது.

 சுந்தர் சியிடம் குட்டுப்பட்டு

சுந்தர் சியிடம் குட்டுப்பட்டு

சுந்தர் சி இயக்கத்தில் எடுக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த சீரியலில் நடிகைகள் எல்லாம் புதுமுகமாக இருந்தனர். இதில் நித்தியா நந்தினி பாம்பு வேடத்தில் நடித்து இருப்பார். இந்த சீரியல் திரைப்படத்திற்கு சமமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு பிறகு தமிழிலும் நித்தியாராம் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் ஆனது. நித்யாவிற்கு அவரது சிரிப்பு தான் பிளஸ் பாயிண்டு.

 உதட்டுக்கு கீழே மச்சம்

உதட்டுக்கு கீழே மச்சம்

அதேபோல அதுக்கு பிறகு உதட்டுக்கு கீழ இருக்கும் மச்சம். இதுதான் நித்தியாவின் க்யூட்னெஸுக்குக் காரணமாம். பொதுவாக சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகமாக பார்ப்பார்கள். ஆனால் நந்தினிசீரியல் பொருத்தவரையில் குழந்தைகளும் இளைஞர்களும் இவரை பார்ப்பதற்காகவே காத்துக்கிடந்தனர். நிறைய ஸ்டேட்டஸ் சாங் கூட நந்தினி நித்யாவை வைத்துதான் பரவி வந்தன.

 இணையதளத்தில்

இணையதளத்தில்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் திரைப்பட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு பரப்பி வருகிறார்கள். அந்த வரிசையில நம்ம நித்தியா ராம் தனது கணவருடன் முகமூடி அணிந்து இதழோடு இதழ் முத்தம் தருவது போல் ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்குப் பெயர் கோரானா கிஸ்ஸாம்.

 முகமூடி ரொமான்ஸ்

முகமூடி ரொமான்ஸ்

ஒருவரை ஒருவர் தொடுவதால் வைரஸ் பரவும் என்பதால் ஒழுக்கமான முறையில் ரொமான்ஸில் ஈடுபடுங்கள் என்று அந்தப் படத்தின் தலைப்பாக அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோ பழையதாக இருந்தாலும் ரசிகர்கள் இதை பார்த்து கிறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கமிட்டடா ஆனவங்க இப்படி கிஸ் கொடுத்து இருக்கீங்க. நாங்க சிங்கிள்ஸ்ஆக இருந்துட்டு இதைப்பார்த்து உருகனுமானு கதறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+