2019: குறைகளை சுட்டி காட்டி டிவி சீரியல்கள் அதிகரித்த ஆண்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு 2019, குறைகளை சுட்டிக் காட்டி டிவி சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பாக ஆரம்பித்த ஆண்டு என்று சொல்லலாம்.

ஆரம்பித்து வைத்தது என்னவோ கலர்ஸ் தமிழ் டிவி சானல்தான். பேரழகி என்று ஒரு சீரியலை ஆரம்பித்து வைத்தது.

இதையடுத்து களத்தில் இறங்கியது ஜீ தமிழ் டிவி, விஜய் டிவி இப்போது சன் டிவி.

கலர்ஸ் தமிழ் டிவி

கலர்ஸ் தமிழ் டிவி

கலர்ஸ் தமிழ் டிவியில் வரிசையாக பேரழகி சீரியலில் கருப்பு பெண் படும் பாடு என்று ஆரம்பித்து, அடுத்து குப்பத்து பெண் ஓவியா இப்படி கொண்டு போனார்கள். ஜீ தமிழ் டிவியில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி ஓவர் குண்டாக இருக்கும் பெண், அடுத்து குடும்பத்தை ஆண் மகன் போல இருந்து காப்பாற்றும் ஒரு பெண்ணின் கதை சத்யா இப்படி கொண்டு போனார்கள்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் எப்போதும் குறைகளை பற்றியே சிந்திப்பவர்களாக கருப்பு பெண் கண்ணம்மாவாக காண்பித்து பாரதி கண்ணம்மா சீரியல், வாய் பேச முடியாத பெண் என்று காண்பித்து காற்றின் மொழி சீரியல், காந்தி நகர் பெண் என்று காண்பித்து தீண்டாமையை உணர்த்தும் விதமாக தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல் என்று வரிசை கட்டி நிற்கிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியல், பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டும் அப் நார்மல் கதை என்று சொல்லும் அளவுக்கு நிஜமா பார்க்க முடியவில்லை,. காற்றின் மொழி சீரியலில் உண்மையா அப்படி இருக்கும் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் கூட பார்த்து ரசிக்கலாம். பாரதி கண்ணம்மா கதை ரொம்ப அபத்தம். அப்படி கருப்பாக காண்பிக்கும் பெண்ணுக்கு எதற்கு இவ்வளவு மேக்கப் என்றும் கேட்க தோன்றுகிறது.

சாக்லேட் சீரியல்

சாக்லேட் சீரியல்

விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவியின் தாக்கம் சற்றே சன் டிவிக்கும் அடித்துவிட்டது போல. சாக்லேட் சீரியலில் அந்த தாக்கம் எட்டிப் பார்த்தாலும்.. சீரியல் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நன்றாக இயக்கி இருக்கிறார். கதையும் நன்றாக இருக்கிறது.

சாக்லேட் போல இனிப்பு

சாக்லேட் போல இனிப்பு

கருப்பாக நடிக்கும் பெண்ணுக்கு மேக்கப் கொஞ்சமும் இல்லாமல் அழகாக இயற்கையாக கதைக்கு ஒட்டும்படி நன்றாக காண்பித்து இருப்பதால் இந்த கதை சாக்லேட் போல இனிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+