டெய்லி 3 தடவையா.. திரும்பிய பக்கமெல்லாம் இதே அக்கப் போரா.. முடியலய்யா முடியலை
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டில் அடைபட்டு கிடந்தாலும் கிடக்கிறார்கள்... நம்ம தொலைக்காட்சி சானல்களின் அக்கப்போர் ஐயோ முடியலைங்க...!
சன் டிவி வரிசையாக திரைப்படங்களை ஒளிபரப்பத் துவங்க... இன்று முதல் விஜய் டிவியும் தினமும் மூன்று படங்கள் ஒளிபரப்ப உள்ளது.ஜீ தமிழ் டிவி ஜீ திரை என்று ஒரு சானல் ஆரம்பித்து அதில் படங்கள் ஒளிபரப்பி வருகிறது.
ஜீ தமிழ் டிவியிலும் படங்கள் ஒளிபரப்பு அவ்வப்போது இருந்து வருகிறது. ஆனால், விஜய் டிவி இப்போது சன் டிவிக்கு போட்டியாக தினமும் மூன்று படங்கள் என்று அறிவித்து ஒளிபரப்பத் துவங்கி இருக்கிறது.

சன் டிவி கே டிவி
சன் நெட்வொர்க் சானல்களில் ஒன்றான கே டிவியில் எப்போதும் படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்போது கே டிவியில் போட்டு போட்டு பார்த்து சலித்த படங்களை சன் டிவி லாக்டவுன் டவுன் நேரத்தில் தினமும் மூன்று படங்கள் என்று ஒளிபரப்பி வருகிறது.

வழக்கம் போல
சன் நெட் வொர்க் சானல்களான கே டிவி, சன் லைஃப் சானல்களில் வழக்கம் போல் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நேரத்தில் சன் டிவியும் படங்களை ஒளிபரப்ப...சானல்களை திருப்பினாலே படங்கள்... படங்கள்... படங்கள்தான். இந்த நிலையில் விஜய் டிவியும் தினமும் 3 படங்கள் என்று இன்று முதல் துவங்கி இருக்கிறது.

மகாபாரதம் இல்லை
விஜய் டிவி தினமும் 2 மணி நேரம் மகாபாரதம் சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வந்தது. காலை 11 மணிக்கு ஆரம்பித்து 1 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த மகாபாரதம் சீரியல் ஒளிபரப்பு இல்லை. இது எப்போது ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பும் இல்லை.

அடங்கமறு மான்கராத்தே
இன்று காலை ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு திரைப்படமும், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் படம் மதியமும், மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த மான் கராத்தே படமும் விஜய் டிவியின் தினமும் மூன்று படங்களிள் வரிசையில் இன்று ஒளிபரப்பாக உள்ளன.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications