Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Roja Serial, Chandralekha Serial: இரண்டு சீரியல்... ஒரே பெயர்... ஒரே ரோல்...ஒரே சானல்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் இரண்டு சீரியல்கள்.. ரோஜா, சந்திர லேகா. இரண்டிலும் ராணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர காந்தாவாக நடிக்கிறார்.

இரண்டிலும் இவருக்கு ஒரே பெயர்தான் சந்திர கந்தா. ரோஜா சீரியலில் சற்றே தனது பெயரை காந்தா சந்திர காந்தாஎன்று ஸ்டைலாக சொல்லிக் கொள்வது இவரது வழக்கம்.

போலீஸ் உடைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் ராணி.சந்திர லேகா சீரியல் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி சீரியல் ஆர்வலர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

பெண் போலீஸ்

பெண் போலீஸ்

பெண் போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக , சொந்த குரலில் பேசி நடிக்கும் நடிகைகள் கிடைப்பது என்பது அரிதாகிவிட்ட நிலையில்தான் ராணி இரண்டு சீரியல்களில் ஒரே வேடத்தில் ஒரே பெயரில் நடிக்க வேண்டியதாகி உள்ளது. இவர்தான் என்று ஆகிவிட்டது, எதற்கு பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு என்று அதே பெயரை வைத்து அதே கேரக்டரை கொடுத்து விட்டார்கள் போலும்.

 ரவுடி கான்ஸ்டபிள்

ரவுடி கான்ஸ்டபிள்

லாக்கப் அல்லது ஜெயிலுக்குள் ரவுடி போலீஸ் கேரக்டரில் நடிக்க ஏகப்பட்ட துணை நடிகைகள் இருக்கிறார்கள். ராணி போன்ற இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கத்தான் நடிகைகள் இல்லை.ரன் போன்ற சீரியல்களில் சில நடிகைகள் சின்ன பெண்களாக இன்பெக்டர் கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள் என்றாலும் அது எடுபடவில்லை.

மிரட்டலான பேச்சு

மிரட்டலான பேச்சு

மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் வேடத்தில் வரும் ராணி அசால்டாக நடித்து, போலீசுக்கே உரிய மிரட்டலான பேச்சு என்று அனைவரையும் தனது நடிப்பால் நம்ப வைத்து விடுவார். இத்தனை வருஷ நடிப்பின் அனுவபவத்தையும் அந்த பாத்திரத்தல் கொட்டித் தீர்த்து விடுவதில் வல்லவர்.இவரை நம்பி எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம் என்று நம்பி இவரை நடிக்க வைப்பார்கள்.

யாரும் இப்படி

யாரும் இப்படி

இப்படி யாரும் இதுவரை சீரியல் வரலாற்றில் இரண்டு சீரியல்களில் ஒரே கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. இவருக்கு இதுவும் ஒரு பாக்கியம் என்றுதான், இதுவும் ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். சீரியல் உலகம் இந்த புகழை ராணிக்கு கொடுத்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+