பாடகருக்கு கிளுகிளுப்பு வேணுமா? ஷூட்டிங் வராமல் ஓட்டலில் செருப்புடன் நடிகர்! திகைத்த தேவர்: பிரபலம்
சென்னை: பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது தமிழ் திரைப்பட உலகின் இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்களை உதாரணமாக கூறி பல்வேறு சம்பவங்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Reflect time என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்த பேட்டியில், "மேடை கச்சேரிகளை நடத்துவதில், தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்..

எம்எஸ்வி எப்பவுமே எளிமையான மனிதர்.. வேட்டியை தூக்கி பிடிச்சிட்டுதான் கேஷூவலாக வருவார்.. இளையராஜா சார் முழுநீள வேட்டியுடன் வருவார்.. ஏஆர் ரஹ்மான் ஸ்டைலிஷ் டிரஸ்ஸில் வருவார்.. தேவா சார், வெள்ளை பைஜாமா ஜூம்மாவில் வருவார்..
சின்னப்பா தேவர்: தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாவை சீரியஸாக பார்ப்பவர்கள் உள்ளனர்.. சின்னப்பா தேவரை பொறுத்தவரை, காலையில் 7 டூ 9 மணிக்குள்ளேயே 3 ஷாட்களையாவது எடுத்துவிட வேண்டும் என்று நினைப்பார். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களை அசிங்க அசிங்கமாக போன் போட்டு திட்டுவார்.
காரணம், இந்த தேதியில் படத்தை முடித்து தர வேண்டும் என்ற உறுதியுடன், ஒவ்வொரு படத்தையும் துவங்குபவர் சின்னப்பா தேவர். ஆனால், ஹிந்தியில் அப்படி இல்லை.. தண்ணி, பார்ட்டிகளில் மூழ்கிவிடுவார்கள்.. போதையில் எழுந்து மதியம் 12 மணிக்குதான் செட்டுக்கு வருவார்கள். "ஹாத்தி மேரே சாத்தி" படத்தில் நடிக்கும்போதே, ராஜேஷ்கண்ணா மிகப்பெரிய ஹீரோவாயிட்டார். அந்த படத்தின் ஷூட்டிங், சென்னையில் வாகினி ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது.
கையில் ஷூ: மதியம் 12 மணி ஆகியும் ராஜேஷ் கண்ணா ஷூட்டிங் வரவில்லை என்பதால், தேவருக்கு கோபம் வந்துவிட்டது. ராஜேஷ் கண்ணா வரட்டும், செருப்பாலயே அடிக்கிறேன் என்று கோபத்தில் திட்ட துவங்கிவிட்டார்..
இந்த விஷயம், ஓட்டல் ரூமில் தங்கியிருந்த ராஜேஷ்கண்ணாவுக்கு தெரிந்துவிட்டது. உடனே, தேவரை தன்னுடைய ரூமுக்கு அழைத்து வருமாறு அங்கிருந்தவர்களிடம் சொல்லி அனுப்பினார்.. தேவரும் கோபத்தில் ரூமுக்குள் நுழைந்ததால், ராஜேஷ் கண்ணா, தன்னுடைய செருப்பை கையில் பிடித்து கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்துவிட்டார் தேவர்.
செருப்பால அடிங்க: தேவரிடம் ராஜேஷ் கண்ணா, "தேவர்ஜி, என்ன நடந்தாலும் இந்த நாலு சுவற்றுக்குள்ளேயே நடக்கட்டும்.. இந்தாங்க, என் செருப்பால கூட என்னை அடிங்க.. நான் இன்னைக்கு பிரபல ஹீரோவாயிட்டேன்.. எல்லார் முன்னாடியும் நீங்க என்னை திட்டுவது சரியல்ல" என்றார். இதைக்கேட்டதுமே தேவருக்கு மனம் இளகிவிட்டது.. உடனே ராஜேஷ் கண்ணாவை கட்டிப்பிடித்து, இனி உன்னை திட்டமாட்டேன் என்றாராம்.
இதுபோல தமிழ்நாட்டில் நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்வார்கள்.. ஆனால் வடமாநிலத்தில் அப்படி கிடையாது. "ஆணுறையுடன் தூங்கிட்டு இருந்தேன்" என்றெல்லாம் நடிகர்கள் சொன்னதாக கிசுகிசுக்கள்கூட அங்கு உண்டு. நம்ம ஊரில், இதுவரை பாடகர்கள், பாடகிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக எந்தவிதமான கிசுகிசுக்களும் வந்ததில்லை.. சக பாடகிகளிடம் கண்ணியத்தோடுதான் நம்முடைய பாடகர்கள் நடந்து கொண்டு வருகிறார்கள்.
மேடைநிகழ்ச்சி: இளையராஜா, எம்எஸ்வி, தேவா, ரஹ்மான் என இவர்களின் ரெக்கார்டிங் தியேட்டர் என்றாலும்சரி, மேடை நிகழ்ச்சி என்றாலும் சரி, சில விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார்கள்.
ஆனால், உதித் நாராயணனை பொறுத்தவரை, பக்கத்தில் பாடகி இருந்தாலும், அவரை கட்டிப்பிடித்துதான் பாடுவார்.. எப்போதுமே லவ் பாட்டுதான் பாடுவார்.. அந்த ரசிகைக்கு முத்தம் தந்துள்ளதை தெரிந்து செய்தாரா? தெரியாமல் செய்தாரா தெரியவில்லை. ஆனால், அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் செய்திருந்தால் அது தவறுதான்.. அந்த பெண் எந்த சர்ச்சையையும் கிளப்பாமல், புகார் கொடுக்காமல் சென்றுள்ளதால், இதை அவர்கள் கேஷூவலாக எடுத்து கொண்டதாக தெரிகிறது.
குரு ஸ்தானம்: ஆனால், உதித் நாராயணன் 69 வயதில் இப்படி செய்திருக்க கூடாது.. ஒரு அப்பா ஸ்தானத்தில், குரு ஸ்தானத்தில் இருந்து கொண்டு, இதை செய்திருக்ககூடாது. இதனால், இவ்வளவு காலமாக காப்பாற்றி வந்த மதிப்பு, இந்த ஒரு சம்பவத்தினால் கெட்டுவிட்டது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications