பாய்ஃபிரண்ட் வச்சுக்கறேன்னு சொல்லு... நடிகை சுகாசினி!
சென்னை: ஜெயா டிவியில் உள்ளே வெளியே என்று ஒரு நிகழ்ச்சி ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் 8 மகளிர் தினத்தில் நேரலையில் ஒளிபரப்பான சுகாசினியின் நேர்காணல் கடந்த ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பானது.
நடிகை சுகாசினியை மாலா மணியன் நேர்காணல் செய்தார். அப்போது பேசிய சுகாசினி பள்ளியில் ஒரு விஷயமாக வட மாநிலம் போக வேண்டி இருந்தபோது. பாய் ஃபிரண்ட் வச்சுக்கறேன்னு சொல்லு.. .பர்மிஷன் தரேன்னு கமல் சொன்னார் என்று கூறினார்.
உள்ளே வெளியே நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பாளரிடம் உள்ளே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்விகள் கேட்க, வெளியில் வியூவர்ஸிடம் இருந்தும் கேள்விகள் வரவேற்கப்படும்.

கமல் சித்தப்பா
அப்பாவுக்கு விபத்து நேர்ந்த சமயத்தில் இவளை மெட்ராசுக்கு அழைச்சுட்டு போயிட்டுன்னு சித்தப்பா கமல்கிட்டே பாட்டி சொல்லி என்னை அனுப்பி வச்சுட்டாங்க. அப்புறம் சென்னைக்கு வந்துட்டேன். இங்கேதான் பள்ளி படிப்பு.. முதன் முதலா ஸ்போர்ட்ஸ் விஷயமா வட மாநிலத்துக்கு போகணும்...அப்பா அம்மா கமல்கிட்டே கேட்டுக்கோன்னு சொல்லிட்டாங்க.

பாய்ஃபிரண்ட் வச்சுக்கறேன்
நான் கமல்கிட்டே போயி கேட்டபோது, பாய் ஃபிரண்ட் வச்சுக்கறேன்னு சொல்லு.. நான் பர்மிஷன் தரேன்னு கலாட்டா பண்ணினார்.அந்த வயசில் என்ன சொல்றது...அக்கா சும்மா ஒப்புக்கோன்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன்...இப்படி சித்தப்பா கமல் நிறைய ஃபன் பண்ணுவார் என்று சொன்னார் சுகாசினி.

ஹீரோ பெருமை
அப்போது இண்டஸ்ட்ரியில் ஹீரோ பெருமைதான் பேசுவாங்க. இந்த படம் அங்கே பிச்சுகிச்சு..இங்கே பிச்சுகிச்சுன்னுதான் பேசிக்குவாங்க. ஹீரோ பெருமையா உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்.முதன் முறையா நான் சிந்து பைரவி படத்தில் நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நல்லா நடிச்சு இருக்கியாமே.. நேஷனல் அவார்ட் கிடைக்கும்னு சொல்றாங்க என்று நடிகை ஜெயசுதா கேட்டாராம்.

நாம் ஃபவுண்டேஷன்
நடிகை சுகாசினி நாம் என்று ஒரு ஃபவுண்டேஷன் துவங்கி நடத்தி வருகிறார். இது தனித்து வாழும் பெண்களுக்கான உதவிக்கரம் நீட்டும் அமைப்பு. இதில் பெண்களுக்கு சுய தொழில் செய்ய கற்றுத் தருவதாகவும் கூறினார் சுகாசினி தான் சிறிது இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் படம் இயக்குவதில் கவனத்தை செலுத்த உள்ளதாகவும் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications