பேத்தியின் 10வது பிறந்தநாள்! வாழ்த்துங்கள்! உமா ரியாஸ்கான் போஸ்ட்! ஷாரிக்கிற்கு குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷாரிக் ரியாஸ் கானின் மனைவி மரியாவின் மகள் சாராவுக்கு 10ஆவது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை உமா ரியாஸ்கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் என் பேத்தியின் 10ஆவது பிறந்தநாள் என்றே குறிப்பிட்டுள்ளார். ரியாஸ்கான்- உமா தம்பதிக்கு இரு மகன்கள். அதில் மூத்த மகன் ஷாரிக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

television riyaz khan shariq

அவர் சிறந்த நடன கலைஞரும் கூட! பிக்பாஸ் ஜோடியில் அனிதாவுடன் இணைந்து நடனமாடி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கும் அவருடைய தோழி மரியாவுக்கும் நட்பு இருந்து வந்த நிலையில் அது திடீரென காதலாக மாறியது.

வயதில் மூத்தவர்

மரியா, ஷாரிக்கைவிட 3 வயது மூத்தவர். மேலும் மரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி அவருக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாரிக், மரியாவை காதலித்து தனது பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பம்

இந்த நிலையில் மரியா கர்ப்பமாக இருப்பதை ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் மரியாவுக்கு ரியாஸ்கான் விமரிசையாக வளைகாப்பு விழாவை நடத்தினார்.

television riyaz khan shariq

வளைகாப்பு விழா

தனது மருமகள் வளைகாப்பு விழாவில் ரியாஸ் கான் அசைவ விருந்து அளித்து அசத்தினார். இந்த விழாவுக்கு தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தை அழைத்திருந்தார்.

சிக்கன் பிரியாணி

சிக்கன், மட்டன் பிரியாணி, மீன் வறுவல், வெள்ளை சாதம், அதற்கான கறி குழம்பு, இனிப்பு, பஜ்ஜி, ரைத்தா உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. முன்னதாக மரியாவுக்கு நலங்கு வைக்கும் நிகழ்வு நடந்தது. தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ரியாஸ் கானும் நலங்கு வைத்தார்.

ஷாரிக் - மரியா டிவி சேனல்

இந்த நிலையில் திருமணமான புதிதில் ஷாரிக் - மரியா டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்த போது தனது மகள் சாராவை,ஷாரிக் தனது மகளாகவே ஏற்றுக் கொண்டார் என்றும், தன்னை விட ,ஷாரிக்கிடம் சாரா பாசமாக இருக்கிறார் என்றும், அவரை விட தாத்தா பாட்டியான ரியாஸ்கானுடனும் உமாவுடனும் சாரா அன்பாக இருப்பதாகவும் மரியா தெரிவித்திருந்தார்.

television riyaz khan shariq

மரியா வளைகாப்பு

அந்த வகையில் மரியா வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட அந்த குழந்தையை ரியாஸும் உமாவும் பத்திரமாக பார்த்துக் கொண்டனர். இந்த நிலையில் சாராவின் 10ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

நிறைமாத நிலவு

இதில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மரியா, ஷாரிக், ரியாஸ் கான், உமா ஆகியோர் சாராவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். சாராவுக்கு உமாவும் ரியாஸ்கானும் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்களை உமா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10ஆவது பிறந்தநாள்

அதில் "எனது பேத்தியின் 10ஆவது பிறந்தநாள் விழா. மகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்துங்கள். லவ் யூ சாரா செல்லம்" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் அவரை பாராட்டி பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

ஷாரிக் நல்ல மனிதர்

ஷாரிக் நல்ல மனிதர், அவரது தாய் நீங்களும் நல்லவர். மரியாவின் குழந்தையை தனது சொந்த பேத்தியாகவே கருதும் குணம் யாருக்கு வரும் என கேட்கிறார்கள். ஷாரிக் மரியாவை திருமணம் செய்த போதிலிருந்து, கணவனை பிரிந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தது அல்லாமல் அவருடைய மகளுக்கு சொந்த தந்தையாகவே ஷாரிக் மாறிவிட்டார் என பாராட்டுகள் குவிந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+