Roja serial: ஒய்யார கொண்டையாம்.. உள்ளே இருப்பது தங்க செயினாம்.. என்னங்கடா டேய்!
சென்னை: சாத்தியம் இல்லாதது எல்லாம் டிவி சீரியல்களில் ஈஸியாக நடக்கும் போல!
சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவின் தலை முடி பின்னலில் பூ வைத்து இருக்கும் இடத்தில் பரம்பரை நகையை கண்டு பிடிக்கிறார்கள். அடேங்கப்பா.. என்னங்கடா கொண்டை இது என்று கவுண்டமணி சொல்வது போல நமக்கும் சொல்லத் தோன்றுகிறது.
திருடி என்று ரோஜாவிற்கு பட்டமும் அளிக்கிறார்கள்... ரோஜா சீரியல் நல்லாருக்குன்னு சொன்னாலும் சொன்னோம்.... போட்டுத் தாக்குகிறார்கள் இப்போது.

அனுவுக்கு நிச்சயதார்த்தம்
அனுவுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது. டைகர் மாணிக்கம் தன் மனைவியோட நகையை எல்லாம் எடுத்துட்டு வந்து மகளுக்கு போட்டு பார்க்க ஆசைப்படறார். பாட்டி அன்னபூரணியும் பேத்திக்கு மகளின் நகையை போட்டு அழகு பார்க்க வேண்டி ரூமுக்கு அனுப்பி வைக்கறாங்க.

டாலர் எங்கே?
அனுவுக்கு நகையை போட்டு அழைச்சுட்டு வர எல்லாரும் ரூமுக்கு போக ரோஜாவும் போறா. அந்த நேரம் பார்த்து அனு டாலரை எப்படியாவது ரோஜா உடம்புக்குள் எங்கியாவது வச்சுட்டு, அந்த பழியை அவள் மேலேயே போடணும்னு திட்டம் போடறாளாம்.

ரோஜா சினிமா
ரோஜா சினிமா பாணியில் இருக்குதுன்னு சொன்னாலும் சொன்னோம்.. திடீர்னு ரோஜாவுக்கே தெரியாம சினிமா பாணியிலே அவள் தலை பின்னலில் டாலர் செயினை ஒளிச்சு வச்சுடறாங்க. பாட்டி எங்கே பரம்பரை டாலர் செயின் என்று கேட்க திரும்பு ரோஜான்னு யசோ சொல்ல..

திரும்பு ரோஜா
திரும்பு ரோஜான்னு யசோ சொல்ல, ரோஜா அப்பாவியா திரும்பறா. அவள் பின்னலில் இருந்து பூவை எடுப்பது போல செயினை எடுக்கறா யசோ. அதான் ஒய்யார கொன்டையாம்.. உள்ளே இருப்பது தங்க செயினாம்.. இது எப்படி இருக்கு?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications