எதிர்நீச்சலில் எதிர்பார்க்காத "டுவிஸ்ட்”.. ஜீவானந்தம் பிஏவிடம் சக்தி.. இனி ஜனனி எடுக்கும் முடிவு..?
சென்னை: எதிர்பாராத திடீர் திருப்பங்கள் "எதிர்நீச்சல்" சீரியலில் நடந்து கொண்டிருப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
காரணம் எதிர் நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் பிஏவாக இருக்கும் பெண் குணசேகரன் வீட்டில் டைனிங் ஹாலில் அமர்ந்தபடி சக்தியோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ வெளியானதும் இனி என்ன நடக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சீரியலாக இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் திடீரென்று பல எதிர்பாராத டுஸ்ட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் இந்த சீரியல் இருந்து வருகிறது.

அதனாலேயே இந்த சீரியல் பலராலும் ரசிக்கப்படுகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் பெண்கள் மட்டும்தான் பார்த்து வருவார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியல் மட்டும்தான் இளைஞர்களையும் வசியம் செய்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதனால் தான் கடந்த வாரம் கூட இந்த சீரியல் டாப் டிஆர்பியில் முதலிடத்தில் பிடித்து பெரிய அளவில் சாதனை படைத்தது.
அதுபோல தொடர்ச்சியாக இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வர தொடங்கி இருக்கிறது. சில மாதங்களாகவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமண டிராக் ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருந்த நிலையில் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் யார் என்பது பற்றியும் ஜீவானந்தத்தால் இனி குணசேகரன் குடும்பத்திற்கு என்ன பிரச்சனை வர இருக்கிறது என்பது பற்றியும் கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே இன்று வெளியான ப்ரோமோவில் பட்டம்மாளின் பேத்தி என்று ஒரு பொண்ணு போன் பண்ணிக்கிட்டே இருக்குமே அது யாரு என்று ஜீவானந்தம் ஜனனி பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாத் மற்றும் ஜீவானந்தத்தின் பிஏவாக நடிக்கும் நடிகை ஜிபா ஷிரின் இருவரும் குணசேகரின் வீட்டில் அதுவும் டைனிங் ஹாலில் இருந்தபடி பேசிக் கொண்டிருக்கும் வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
அதை ஜிபா தான் பகிர்ந்து இருக்கிறார். அதோடு சக்தியும் ஜிபாவும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? என்று கேள்வியும் கேட்டிருக்கிறார். அத்தோடு இது நிஜமா? அல்லது ரீல் காட்சியா? என்றும் கேள்விக்குறியோடு இவர் கேப்ஷன் கொடுத்திருக்கும் நிலையில் இது ஒரு வேலை நிஜமாக இருக்குமா? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து இல்லை இல்லை அதுவெல்லாம் இருக்கவே இருக்காது. இது ஸ்கிரிப்ட் பேப்பராக இருக்கும். அதை இருவரும் டிஸ்கஷன் செய்து படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருவேளை அப்பத்தா கைரேகையை ஜீவானந்தம் எடுத்து விட்டதால் இனி தனக்கும் இந்த குடும்பத்தில் 40% ஷேர் இருக்கிறது என்று கூறி தன்னுடைய பிஏவோடு ஜீவானந்தம் இந்த வீட்டிற்கு வந்து விடுவாரோ..? அப்போதுதான் சக்தியும் அவரும் பேசிக் கொண்டிருப்பாரோ..? என்றும் யோசிக்க தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் ஒரு சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications