40 சேனல்கள் + கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.. "வேவ்ஸ்" ஓடிடி அறிமுகம் செய்த மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசு வேவ்ஸ் என்ற புதிய ஓடிடி தளத்தை துவங்கியுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் ராமாயணம், மகாபாரதம், ஷக்தி மான் போன்ற 90 கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றார் போல பல்வேறு சினிமாக்களும் இடம் பெற்றுள்ளன. கிரிக்கெட் போட்டிகளையும் இந்த ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கலாம்.
தொலைக்காட்சிகளில் மட்டும் படங்களையும், பாடல்களையும் பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தகவல் தொடர்பு துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் தற்போது உள்ளங்கைக்குள் உலகமே அடங்கி விட்டது என சொல்லும் அளவுக்கு செல்போனில் அனைத்து தகவல்களையும் பார்க்கும் அளவுக்கு வசதி பெருகிவிட்டது.

ஸ்மார்ட் போன்கள் வருகையால் தற்போது மக்களிடையே டிவி பார்க்கும் பழக்கம் கூட குறைந்துவிட்டது. புதிய சினிமாக்கள் வந்தால் கூட ஓடிடி தளங்களில் மக்கள் வீடுகளில் இருந்தபடியே பார்த்துக் கொள்ள முடிகிறது. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் வெப்சீரிஸ்கள், தொலைக்காட்சி நேரலைகள், சினிமாக்கள் ரிலீஸ் என சேட்டிலைட் சேனல்களை மிஞ்சும் அளவுக்கு மக்களிடயே வரவேற்பை பெற்று வருகின்றன.
देश के नागरिकों को साफ़ सुथरा पारिवारिक मनोरंजन तथा देश दुनिया की अद्यतन जानकारियाँ खबरी चैनलों के माध्यम से देने , बच्चों को गेम्स, आसान ऑनलाइन शॉपिंग के साथ खेलों को लाइव देखने की सुविधा के साथ भारत का अपना OTT प्रसार भारती ने आज launch किया है @PMOIndia @prasarbharati… pic.twitter.com/p5AeMEOBgq
— Navneet Sehgal (@navneetsehgal3) November 20, 2024
இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது ஓடிடி தளத்தை துவங்கியுள்ளது. மத்திய அரசின் பிரசார பாரதி நிறுவனம் waves என்ற ஓடிடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேவ்ஸ் ஓடிடி தளத்தில் ராமாயணம், மகாபாரதம், ஷக்தி மான் போன்ற 90 கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றார் போல பல்வேறு சினிமாக்களும் இடம் பெற்றுள்ளன.
அது மட்டும் இன்றி 65 க்கும் மேற்பட்ட சேனல்களின் நேரலை ஒளிபரப்புகளை இந்த ஓடிடியில் காண முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி, கன்னடா, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி , பஞ்சாபி, அசாம் மொழி உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட மொழிகளில் பல்வேறு நிகழ்சிசிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்டீரிங், கேமிங், ஆன்லைன் ஷாப்பிங் டிஜிட்டல் காமர்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளன.
மொபைல் போன் கொடுத்து பயனர்கள் உள் நுழைந்தால் போதும். முக்கியமான ஆன்மீக நிகழ்வுகள் அதாவது அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி நிகழ்வு ஆகியவற்றையும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியிலும் இந்த வேவ்ஸ் ஓடிடி தளத்தில் ஒலிபரப்பு செய்யப்படும். விரைவில் நடைபெற உள்ள அமெரிக்க பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளும் இந்த வேவ்ஸ் தளத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.
பல முன்னணி ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேனல்களும் இந்த வேவ்ஸ் தளத்தில் இடம் பெற்றுள்ளன. வேவ்ஸ் ஓடிடி குறித்து பிரசார பாரதி தலைவர் கூறுகையில், "பிரசார் பாரதியின் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஓடிடியில் கிடைக்கும். மக்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள முடியும்" என்றார். இந்த செயலியை பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications