Web Series: வியூவர்ஸ் (நேயர்) விருப்பம்.. வர வர ரொம்ப புதுஸ்ஸ்ஸா இருக்கே!
சென்னை: ஹோம் டிவி யூடியூப் சானல் வெளியிட்டு வரும் வெப்சீரிஸ் இளசுகளுக்கு பிடிச்ச மாதிரி கதை... பாடல் என்று இருப்பதால், பலருக்கும் பிடித்து விரும்பிப் பார்த்து வருகின்றனர்.
அதுவும் குறைந்த நாட்களில் முடிந்து விடும் வெப் சீரிஸில் மட்டும்தான் இந்த நேயர் விருப்பம் நிறைவேறுகிறது. தொலைக்காட்சி தொடர்கள் என்றால் என்னதான் கமெண்ட்ஸ் போட்டாலும் ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் முன் வருவதில்லை.
வெப் சீரிஸ் எனும்போது ரசிகர்களின் விருப்பத்துக்கும், கமெண்ட்ஸுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல.. புதுப் புது முகங்கள்.. புதுப் புது காட்சிகள் என்று எல்லாமே புதுசு என்பது இவர்கள் விருப்பம்.

ஒன் டைம் ரிலீஸ்
வெப் சீரிஸ் என்றால் ஒன் டைம் ரிலீஸ் என்பார்களே அத்தோடு முடிந்துவிடும். தேவை இல்லாத ஃபிளாஷ் பேக் காட்சிகள் கிடையாது. ஜவ்வு மாதிரி இழுவை கிடையாது. மிக முக்கியமாக எல்லாருமே ஃபிரஷ்.. தொழில் நுட்ப கலைஞர்களில் ஆரம்பித்து நடிப்பவர் வரை எல்லாரும் அவர்களுக்கு புதிதாகத் தெரிவதால் எதாவது ஒரு எதிர்பார்ப்போடு வெப் சீரிஸ் அவர்களை பார்க்க வைக்கிறது.

உன்னோடு ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள் என்கிற இந்த வெப் சீரிஸ், ஒரு போலீஸ் அதிகாரியின் பெண், தெரிந்த ஒரு இளைஞருடன் தங்க நேரிடுகிறது. இந்த பையன் அந்த பெண்ணை ஒரு தலையாய் காதலித்துக்கொண்டு இருப்பவன். அவள் அவன் மீது காதல் வரவில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். ஒவ்வொரு நாளும் எதாவது செய்து அவளை காதலிக்க வைக்கும் முயற்சியில் இவன் மனம் தளராமல் செயல்பட்டு வருகிறான்.

ஒரு கதை
போரடிக்குது ஒரு கதை சொல்லுன்னு சொல்றா. அவன் ஒரு உண்மைக் கதை சொல்லவா என்று கேட்கிறான். ரொம்ப நீட்டி சொல்லாதே.. எனக்கு கேட்க நேரமில்லை. சுருக்கமா சொல்லுன்னு சொல்றான். நான் உன்னை காதலிக்கற மாதிரி என்னை ஒரு பொண்ணு காதலிச்சுது.. ஆனா, நான் கமிட்டாயிட்டேன்னு சொன்னேன்.. இடை மறித்த அவள், இரு இரு நானே உன்னை ஏத்துக்கலை நீ எப்படி கமிட் ஆயிட்டேன்னு சொல்லுவேன்னு எரிஞ்சு விழறா.

கதை வேணுமா
கதை வேணுமா வேணாமான்னு கேட்கறான். வேனும் சொல்லுன்னு சொல்றா அவ. என்னையே சுத்தி சுத்தி வந்தா.. என் மனசு மாறவே இல்லை. ஒரு நாள் வீடியோ கால் பண்ணிட்டு, இனி நான் வாழ விரும்பலைன்னு என் கண் முன்னாடியே தொங்கிட்டான்னு சொல்றான். தொங்கிட்டான்னா எதுல தொங்கினா? எதை புடிச்சு தொங்கினா என்று இவள் கேட்க.. ஏய்.. தூக்கில தொங்கிட்டா என்று சொல்ல அதிர்ந்து போய் அழுதுகிட்டே ஏண்டா இப்படி பண்ணினே என்று அவள் அவனை அடிக்கிறாள்.

இருவருக்கும் ரொமான்ஸ்
அவன் சிரித்துக்கொண்டே போரடிக்குதுன்னு கதை கேட்டே.. இந்த கதை நல்லாருக்கா இல்லையான்னு கேட்கிறான். அப்போதும் அவள் அவனை பொய்யாக கோபித்துக் கொள்கிறாள். இருவருக்குள்ளும் உன்னோடு ஒரு நாள் என்கிற ரொமான்டிக் பாடலும் இருக்கிறது. இப்படி தினம் தினம் சுவாரஸ்யமான ஒரு குட்டி கதை.இதுதான் வெப் சீரிஸ்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications