முன்னும் பின்னும் காரை ஓட்டி சரிதாவின் தலைமுடியை இழுத்து.. உச்சம் பெற்ற நடிகையின் சொல்ல முடியாத வலி
சென்னை: சினிமா உலகில் உயரம் தொடும் புகழ் கிடைத்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை சுமந்த பல நடிகைகள் உண்டு.. அதில் ஒருவர்தான் சரிதா.. அபிலாஷா என்ற இயற்பெயர் கொண்டவரை, சினிமாவுக்காக இயக்குநர் கே. பாலச்சந்தர் வைத்த பெயர்தான் 'சரிதா'. பணம், புகழ் போன்றவைகளில் சரிதா வெற்றி பெற்றாலும் சொந்த வாழ்க்கை துயரம் பரிதாபகரமானது.
ஆழமான நடிப்புடன், "மரோ சரித்ரா" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரிதா.. காலப்போக்கில் பல மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.

விதியை உடைத்த சரிதா
கருப்பாக இருந்தால், குண்டாக இருந்தால் சினிமாவில் நடிகையாக முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் சரிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தவை. பாலச்சந்தர் தன்னுடைய 15 படங்களிலும் சரிதாவை நடிக்க வைத்ததும், அந்த 15 படங்களுமே வெற்றி பெற்றதும் இதற்கு சாட்சியாகும்.
பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் சரிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பார்கள் என்றால், அவரது நடிப்பு எப்படிப்பட்டது என்று ஸ்பெஷலாக சொல்ல வேண்டியதில்லை.. பல மாநில விருதுகள், தேசிய விருதுகள் என சரிதாவுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், மேலும் பல தேசிய விருதுகள் கிடைக்க வேண்டிய நடிகை என்பதை மறுக்க முடியாது..
மூன்றாம் பிறை
ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.. காரணம், சில இந்தி நடிகைகளின் படங்கள் இந்திய அளவில் அதிகம் வெளியானதால், அந்த வாய்ப்புகள் சரிதாவுக்கு வராமலேயே போய்விட்டன.. "மூன்றாம் பிறை" படத்தில் சரிதாவால் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியவில்லை.. ஒருவேளை அதில் நடித்திருந்தால், தேசிய விருது அவருக்கே சென்றிருக்கும் என்று அப்போதைய பத்திரிகைகள் எழுதின.
திரையில் உச்சத்தை தொட்ட வாழ்க்கை, நிஜத்தில் அத்தனை இனிமையானதாக சரிதாவுக்கு அமையவில்லை..
முகேஷ் திருமணம்
ஆம், 2011-ல் மலையாள புகழ் நடிகரும், அரசியல்வாதியுமான முகேஷை திருமணம் செய்தார்.. ஆனால் அந்த திருமணம் சரிதாவுக்கு பேரதிர்ச்சியாக முடிந்தது. கர்ப்பமாக இருந்தபோது கணவரால் தாக்கப்பட்டதாக, அடித்து விரட்டப்பட்டதாக கண்ணீர் பேட்டிகளை சரிதா தந்துள்ளார்.. இது தொடர்பாக ஹேமா கமிட்டியில் அவர் அளித்த புகார், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
"நான் கர்ப்பிணியாக இருந்தபோது சண்டை போட்டு என்னை வயிற்றில் அவர் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, இரவு சாப்பிடுவதற்காக ஒன்றாக சென்றோம். திரும்பி வரும்போது, நான் காரில் ஏற முயன்றபோது, அவர் என்னை ஏமாற்றிக்கொண்டே காரை முன்னும் பின்னுமாக எடுத்து சென்றார். காரின் பின்னால் ஓடும்போது நான் விழுந்தேன். கீழே உட்கார்ந்து அழுது விட்டேன்.
ஏன் லேட்டு - நடிகை சரிதா
ஒருமுறை, அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வர்றீங்க என்று நான் கேட்டேன். உடனே அவர் என்னை முடியை பிடித்து இழுத்து, தரையில் இழுத்து சென்று அடித்தார்..
பிறகு ஒரு நாள் முகேஷின் அப்பா என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என சொல்லி அழுததோடு, அவரை பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை" என சரிதா பேட்டிகளில் கூறியிருந்தார்.
ஒரு சீனியர் நடிகை, அதிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர், தன்னுடைய கணவனால் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படையாக சொன்னது, அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய செய்தியாக மாறியது.. அதன் முடிவாக கிடைத்ததுதான் விவாகரத்து.. இந்த டைவர்ஸால் சரிதாவின் மனம் உடைந்து, வாழ்க்கையும் நொறுங்கியது..
நடிப்பு ராட்சசி சரிதா
அதன்பிறகு, பிள்ளைகளுக்காக 10 ஆண்டுகள் சினிமாவை விட்டே விட்டு விலகியிருந்தார்.. தன்னுடைய பேர், புகழ், பாராட்டுக்கள் அனைத்தையும் துறந்து, ஒரு சிறந்த தாயாக மட்டுமே அந்த 10 வருடம் வாழ்ந்த காலம் அது.. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், பல வருட கழித்து, மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் சரிதா நடிக்க தொடங்கினார்.
இன்றும் தமிழக மக்கள் சரிதாவை தங்கள் வீட்டு பெண்ணாக நினைப்பதற்கு காரணம், அவருக்கு நடிப்பில் வெயிட்டான கேரக்டர்களை தந்த பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள்தான் என்பதை மறுக்க முடியாது..
அதனால்தான், எந்த மேடையில் பேசினாலும், "தமிழக ரசிகர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவள்" என்று சரிதா உருக்கமாக சொல்வார். புகழின் உச்சத்தையும், வாழ்க்கையின் ஆழ்ந்த வலியையும் ஒரே நேரத்தில் அனுபவித்த நடிப்புலக ராட்சசி சரிதா ஆவார்...!!
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications