மீண்டும் மீண்டுமா.. தமிழர்களை வில்லனாக காட்டும் மற்றொரு மலையாள சினிமா "உயிர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழர்கள் என்றாலே கொலை, அல்லது பலாத்கார குற்றவாளிகளாகத்தான் காட்டுவீர்களா.." என்ற கேள்வியை மறுபடியும் கிளப்பியுள்ளது பத்மகுமார் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி, இப்போது தமிழ் டப்பிங்குடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கும் "உயிர்" (Uyir) திரைப்படம்.

ரோஷன் மேத்யூ, பைஜு சந்தோஷ், அதுல்யா சந்திரா, சுருதி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த த்ரில்லர் திரைப்படம், அதன் லொகேசன் தேர்வுக்காவும், ஆரம்ப கட்ட பரபரப்புக்காகவும் பாராட்டுகளை பெற்றாலும், இதிலுமா நீங்க இப்படி செய்வீங்க என தமிழர்களை கேட்க வைக்கவும் தவறவிடவில்லை.

Uyir Vs Katta Kusthi 2

ஆம்.. இந்த படத்திலும் கள்ளக் காதலும், கொலையும் செய்வது தமிழ் கதாப்பாத்திரம்தான். மலையாள சினிமாக்களுக்கே உரித்தான கருப்பான தமிழன் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப இதிலும் வில்லன் கருப்பு கலர்தான். ஆதி காலம் முதல் ஐயப்பனும் கோஷியும் வரையும் கூட தமிழர்களை பாண்டி என்றும், கருப்பாகவும், வில்லனாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் குறியீடு காட்டும் மலையாள திரையுலக கூட்டம் இதிலும் தங்கள் குசும்பை காட்டிவிட்டது என்று கொந்தளிக்கிறார்கள் ரசிகர்கள். அதேநேரம், நம்மவர்கள் சிலரோ இதற்கு எதிர் சேவல் விடுகிறார்கள்.

நாம மட்டும் கம்மியா. மலையாள பெண் என்றாலே கிளாமராக காட்டுவதுதானே பாக்கியராஜ் காலம் முதல் தொண்டு தொட்டு பரவியுள்ள பழக்கம் என்று பதிலடி கொடுக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். சமீபத்திய உதாரணம் "கட்டா குஸ்தி 2" என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். மலையாள டீச்சரை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டோடு படம் முழுக்க சுற்றலில் விட்டு, ஹீரோ இடுப்பிலும் ஏற்றி விட்டு அழகு பார்க்கும்போது மட்டும் இனித்ததா என்ற அவர்கள் வாதத்திலும் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை போல, தமிழ்-மலையாள படைப்பாளிகள் உட்கார்ந்து அமர்ந்து.. சிம்லா ஒப்பந்தம்போல ஒரு குன்னூர் ஒப்பந்தமோ, மூணார் ஒப்பந்தமோ போட்டு இந்த உரசலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே தென்இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+