Web Series: எனக்கு நல்லா புரியுது... நாம் அண்ணன் தங்கைதான்...!
சென்னை: ஜீ5 சானலில் உயிரே வெப்சீரீஸ் தினம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருது. உயிரே வெப்சீரீஸ் ஃபேமிலி சப்ஜெட்.. நன்றாக இருக்கிறது என்பது சீரீஸை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் கருத்து.
உயிரே மட்டும் இல்லாமல், அறிவான், வேட்டை என்று இன்னும் இரண்டு வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. 10 அல்லது 15 எபிசோட்களில் வெப்சீரீஸ் முடிந்து விடுவதால் பலரின் விருப்பமாக வெப்சீரீஸ் இருக்கிறது.
பிரபலங்கள் வெப்சீரீஸில் நடிக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றாலும், புது முகங்கள் அறிமுகமாகும் வெப்சீரீஸ்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

உயிரே வெப்சீரீஸ்
உயிரே சீரீஸ், புதிதாக கல்யாணம் ஆகி இருக்கும் மணப்பெண்ணின் தங்கையிடம் எப்படி உறவாகலாம் என்று பேசி, மணமகனின் தம்பியாக இருப்பவர்கள் எப்படி ஒரு கல்யாணத்தில் பிட்டு போடுவது எப்படி வழக்கமாக நடக்குமோ...அது இந்த சீரீஸில் நடக்கிறது.நைசா மணமகனின் தம்பி, மணமகளின் தங்கை கிட்டே பேச ஆரம்பிக்கிறான்.

நாம என்ன உறவு
மணமகனின் உடன் பிறந்த தம்பி இல்லையாம்...தம்பி மாதிரி உறவில் இருக்கும் ஒருவன் மணமகளின் தங்கையை பார்த்து, அஷ்வின் எனக்கு அண்ணன் மாதிரிங்க..மாதிரி என்ன.. உடன் பிறவாத அண்ணன். நீங்க பிரியங்கா தங்கை.அப்போ நாம ரெண்டு பேரும் என்ன உறவு என்று கேட்கிறான்.

அஷ்வின் பிரியங்கா
என் அண்ணன் அஷ்வினும் உங்க அக்கா பிரியங்காவும் கணவன் மனைவி...அப்போ நாம ரெண்டு பேரும் என்ன உறவு என்று கேட்கிறான் அவன். என்ன உறவு.. எனக்கு புரியலையே என்று இவள் நழுவுகிறாள். நல்லா யோசிங்க.. உங்க அக்காவும், என் அண்ணனும் கணவன் மனைவின்னா நம்ம என்ன உறவு என்று கேட்கிறான் மறுபடியும்.

நல்லா புரியுது
நல்லா ..புரியுதுங்க.உங்க அண்ணனும், என் அக்காவும் கணவன் மனைவி...அதாவது எனக்கு அக்கா.. உங்களுக்கு அண்ணன்.. அப்போ நாம ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி..எனக்கு நல்ல புரிஞ்சுருச்சு என்று அவள் இவனை குழப்ப...இருங்க.. அவசரப்படாதீங்க...எனக்கு இப்போ குழப்பமா இருக்குதுன்னு சொல்றான். இப்படி போகுது உயிரே!












Click it and Unblock the Notifications