வாணி பார்த்த பார்வை.. அந்த ஊசிக்கும் வெட்கம் வந்து விடும் போலயே!
சென்னை: தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என ஒரு போட்டோ வெளியிட்டதும் ஊசியை கவனிக்காத ரசிகர்கள் போட்டோவில் வாணி போஜனுக்கு வலிக்குமே என தான் பீல் பண்ணி வருகின்றனர்.
அதுவும் இந்த மாதிரி பார்வையால் புன்னகை செய்தால் அந்த ஊசி கூட பூவாக மாறி நாணி கோணிக் கொள்ளதா என்றும் கலாய்க்கின்றனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை நாடெங்கும் பரவி பல பேர் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

வாணி போட்ட தடுப்பூசி
மக்கள் அனைவரும் பெரும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் போது இந்தியாவிலும் தடுப்பூசி அதிகமாக போடப்பட்டு வருகிறது .அதிலும் தமிழ்நாட்டில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் சிலர் இந்த ஊசி நினைத்து பயந்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரபலங்கள் பலர் தைரியமாக ஊசி போட்டுக் கொண்டு வருகின்றனர் .

தடுப்பூசி
இதனால் இதனை பார்த்து மக்களும் போட ஆரம்பித்திருக்கின்றனர் .அந்த மாதிரிதான் தற்போது சின்னத்திரையின் நயன்தாரா என அழைக்கப்படும் வாணிபோஜன் கலக்கலாக தடுப்பூசியை போட்டு இருக்கிறார். இவருடைய போட்டோவை பார்த்ததும் அவருக்கு வலித்ததோ இல்லையோ அவருடைய ரசிகர்களுக்கு வலிக்கிறதாம்.

சினிமாவில் அறிமுகம்
பல நடிகைகள் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்து அதில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அல்லது புதுப்பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சீரியலில் களமிறங்குவார். ஆனால் முதன் முதலில் சீரியலில் காலடி எடுத்து வைத்து தொடர்ந்து ஒரு சீரியலில் நான்கு வருடங்களுக்கு மேலாக நடித்து அதில் இருந்து பல சீரியல்களில் நடித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு வாணிபோஜன் எனும் பெயர் இருந்தாலும் தெய்வமகள் சத்யா என்று தான் இவரை அனைவரும் கூப்பிட்டு வருகின்றனர் .

ரசிகர்கள் பட்டாளம்
இவருக்கு முதல் சீரியலில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் சீரியலுக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் இந்த சீரியலுக்கு மட்டும்தான் வீட்டில் இருக்கும் ஆண்களும் அடிமையாக மாறி விட்டனர் .தன்னுடைய அழகாலயும் அலட்டிக்கொள்ளாத நடிப்பாலயும் அனைவரையும் வசீகரித்தார் அதனால் தான் இவர் சினிமாவில் நடித்தாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சத்யான்னா உசுரு
இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியலிலும் விஜய் டிவியில் லட்சுமி வந்தாச்சு எனும் சீரியலிலும் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் குழந்தைகளின் மனதை கவர்ந்த குட்டீஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக வந்து குழந்தைகளும் மனதையும் கொள்ளை கொண்டு விட்டார்.இவருடைய செல்லம் கொஞ்சலான பேச்சை பார்த்து குழந்தைகள் கூட ஏங்கிக் கொண்டிருக்கிறது .

பீலிங்கா இருக்கே
தற்போது இவரை சீரியலில் காணாமல் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர் .ஆனால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார் .இவருடைய போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு உருகி உருகி கமெண்ட் போட்டு வருகின்றனர் .

தீவிர ரசிகர்கள்
இவருடைய ரசிகர்களின் கமெண்டுகள் பார்க்கும் போதே தெரிகிறது இவர் மீது எந்த அளவிற்கு வெறியான ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று. ஆனாலும் தற்போது இவர் சினிமாக்களில் பிசியாக இருந்தாலும் இந்த லாக்டோன் நேரத்தில் தன்னுடைய பாதுகாப்பும் தன்னால் அடுத்தவர்களுக்கு எந்த கஷ்டமும் வந்துவிடக்கூடாது என இவர் பொறுப்பாக போய் தடுப்பூசி போடுவதை பார்த்து பலர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .

செல்லத்துக்கு வலிக்காதா
அதுவும் ரசிகர்கள் பலருக்கு அந்த ஊசி மீதுதான் கோபமாக இருக்கிறதாம் அந்த பிஞ்சுக் கையில் வலிக்காம இறங்கி விடு என ஊசியை பார்த்து கேட்டு வருகின்றனர் .ஊசி போட்டு பல மணி நேரம் ஆன பிறகு அவர் போஸ்ட் போட்டிருந்தாலும் ரசிகர்கள் குழந்தைத்தனமாக இப்படி கமெண்ட் போட்டுக் கொண்டிருப்பது பார்க்கும்போது பாவமாகத்தான் இருக்கிறது .அதுமட்டுமல்லாமல் வாணிபோஜன் மீது அவர்களுக்கு இருக்கும் பாசமும் தெரிகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications