என் வயிற்று பொழப்புக்காக பேசுறேன்னு சொன்ன பயில்வான்.. அப்போ உங்க கடைசி மகள்? ஷகிலா கேட்ட கேள்வி
சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை "ஷகிலா"வும் பயில்வான் ரங்கநாதனும் நேருக்கு நேராக மோதி இருக்கின்றனர்.
வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார். அவரிடம் எதிர் எதிர் தரப்பில் அமர்ந்து பயில்வான் ரங்கநாதன் மற்றும் ஷகிலா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதை காப்பியடித்து ஒவ்வொரு சேனல்களிலும் புதிய பெயரில் நிகழ்ச்சி தொடங்கப்படுவது வாடிக்கைதான். அந்த வகையில் ஜீ தமிழில் பெரிய அளவில் சர்ச்சைகளையும் பரபரப்பையும் சந்தித்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை காப்பி அடித்து கலைஞர் டிவியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி நடுவராக அமர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
ஏற்கனவே இரவு 9 மணி நேரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலும், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல், ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் என்று மூன்று சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் டிஆர்பிஐ கூட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை சேனல் தரப்பிலிருந்து எடுத்து இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பிறகு பல குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசி கொண்டிருக்கின்றனர். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்திய அகோரி கலையரசன் கலந்து கொண்ட போது அவருக்கு எதிராக சில அகோரிகள் கலந்து கொண்டு இருந்தனர். அந்த எபிசோடு பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இப்போது நடிகை ஷகிலா மற்றும் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொள்ளும் புரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பயில்வான் ரங்கநாதன் குயிலி முன்பு அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் ஷகிலாவிற்கு பயில்வான் வணக்கம் சொல்ல, பதிலுக்கு ஷகிலாவும் வணக்கம் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஷகிலாவிடம் பயில்வான் ரங்கநாதன், "லிவிங் டு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கியே? எப்போ கல்யாணம் பண்ண போறேன்னு கேட்கிறான்" என்று சொல்கிறார்.
அதற்கு ஷகிலா "வாட் இஸ் யுவர் பிராப்ளம்" என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து பேசிய பயில்வான், "ஷகிலா வந்து இதற்கு முன்பு என்ன மாதிரி எல்லாம் நடிச்சது.. இப்போ அது பஞ்சாயத்து பண்ணுது என்று கேட்கிறார்கள்" என்று சொல்ல, அதற்கு ஷகிலா "என் வயித்து பொழப்புக்காக காட்டுறோங்க" என்று சொல்கிறார். அதற்கு பயில்வான், "அது போல தான் நானும் என் வயித்து பொழப்புக்காக பேசுறேன்" என்று சொல்ல, நடுவராக இருக்கும் குயிலி, "வயித்து பொழப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா? என்பதுதான் எங்க எல்லாருடைய கேள்வி" என்று கேட்கிறார்.
அதற்கு பயில்வான் "என்ன வேணாலும் காட்டலாமா? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று சொல்ல, அதற்கு ஷகிலா இவரு ஒரு நல்ல அப்பாவா கூட இருக்க மாட்டேங்கிறாரு என்று சொல்கிறார். அதற்கு கோபப்பட்ட பயில்வான், "உரிமையெல்லாம் ஒரு எல்லை தான்" என்று சொல்ல, அதற்கு பதிலுக்கு கோபப்பட்ட ஷகிலா," என்ன பயமா" என்று கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து பேசிய பயில்வான், "போயா வேலைய பாத்துட்டுன்னு சொன்னால் என்ன அர்த்தம்?" என்று கேட்க அதற்கு ஷகிலா, "நான் ஒன்னு சொல்லட்டுங்களா? உங்க கடைசி பொண்ணு பத்தி நீங்க சொல்லுங்க.. அவங்க யாரை லவ் பண்றாங்க?" என்று கேட்க, கோபமான பயில்வான், "நாக்கு அழுகிடும்" என்று கை நீட்டி பேசுகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications