குபீர் சிரிப்பில் ஓயாமல் வடிவேலு காமெடி...!
சென்னை: திரும்பின திசை எல்லாம் கொரோனா செய்திகள்...தொலைக்காட்சிகளிலும் கொரோனா செய்திகள் என்று ஸ்ஸ்...அப்பா கண்ணைக் கட்டுதே என்று சானலை மாற்றினால் படம் படம் என்று ஒரே குஷ்டமப்பா சாரி கஷ்டமப்பா என்று இருக்கிறது.
இந்த நேரத்திலும் பெரும் ஆறுதலாக இருப்பது ஆதித்யா சானலின் காமெடி நிகழ்ச்சிகள்தான். எப்போது இந்த சானலை வைத்தாலும் குபீர் என்று சிரிக்கும்படி நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த காமெடிகள்....
சிறிது மாறுதலுக்கு என்று அவ்வப்போது சின்ன கலைவாணர் விவேக் காமெடிகள்... இன்றைய தலைமுறையும் விரும்பி பார்த்து ரசிக்கும் கவுண்டமணி காமெடிகள்..மற்றும் கவுண்டமணி செந்தில் காம்போ காமெடிகள்...

குபீர் சிரிப்பு மாஸ்டர் பீஸ்
ஆதித்யா சானலில் தினம் தோறும் இரவு நேரங்களில் குபீர் சிரிப்பு, மாஸ்டர் பீஸ் என்று இரண்டு காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. குபீர் சிரிப்பு நிகழ்ச்சியை பார்க்கும்போதே குபீரென்று சிரிக்கும்படியான காமெடிகள்..மாஸ்டர் பீஸ் என்றால் ஒரு படத்தின் மாஸ்டர் பீஸ் காமெடிகளை தனித் தனியாக கலெக்ட் செய்து அவைகளை ஒளிபரப்பி வருகிறது ஆதித்யா சானல்.

கவுண்டமணி செந்தில்
கவுண்டமணி செந்தில் காம்போ காமெடிகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கின்றன. இந்த காமெடிகள் தவிர்த்து கவுண்டமணி ஹீரோக்களுடன் செய்துள்ள காமெடிகள் என்று வாய்விட்டு சிரிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக நடிகன் படத்தில் சத்யராஜுடன் மட்டும் இல்லாமல் மனோரமா ஆச்சியின் காம்போவிலும் கவுண்டமணி நடித்து இருக்கும் நகைச்சுவை காட்சிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.

வடிவேலு அர்ஜுன்
நடிகர் வடிவேலு ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் மருதமலை படத்தில் நடித்து இருக்கும் காமெடி காட்சிகள்...புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன் என்று போலீஸ் உடையில் இருந்துக்கொண்டு வடிவேலு குமுறுவது...நடிகை நிலாவிடம்...உனக்கு டிரான்ஸ்ஃபர் இருக்குத்தாமே இரும்மா ஒரு பொசிஷனில் நின்னுகிட்டு ஃபீல் பன்றேன்னு திரும்பி நின்றுகொண்டு குமுறி குமுறி அழுவது... இவை குபீர் சிரிப்பு காட்சிகள்.

வடிவேலு சரத்குமார்
வடிவேலு சரத்குமார் காம்போவில் வெளிவந்த படங்களில் ஏய் படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் என்று ஆதித்யா சானலின் குபீர் சிரிப்பு. மாஸ்டர் பீஸ் நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது. வடிவேலு, உடன் நடிப்பது எந்த ஹீரோவாயினும் பாரபட்சம் இன்றி காமெடி நடிப்பில் கோலோச்சி இருப்பார்.

காந்த கண்ணழகி காமெடி
காந்த கண்ணழகி என்று பூ மிதிக்க கவுண்டமணி வந்து கலகலக்க வைக்கும் சூரியன் படத்தின் நகைச்சுவை காட்சிகள்...நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா என்று கவுண்டமணி சொல்வது...போன் ஒயர் கனெக்ஷன் அந்து போயி ஒரு வாரமாகுதுன்னு சொல்ல, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லும் காமெடிகள் என்று இரவு நேரத்தில் பார்த்து ரசிச்சு.. மனம் விட்டு சிரிக்க ஆதித்யா சானல் வழிவகுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications