சன் குடும்ப விழாவில் அசத்திய வடிவேலு.. 2020 அவருடையதாகுமா?
சென்னை: அடுத்தடுத்து அசத்தி வருகிறார் வைகைப் புயல் வடிவேலு. சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவின் ப்ரோமோவில் நடிகர் வடிவேலுவின் ப்ரோமோதான் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது.
அவரின் காமெடி கலாட்டாக்கள், அவர் குரலில் பாடல்கள் என்று நிகழ்ச்சி களைக் கட்டுகிறது. சமீபத்தில்தான் கமல் பிறந்த நாள் விழாவில் வடிவேலு தனது பேச்சால் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
நிகழ்ச்சியின் ப்ரோமோவே ரசிக்க வைக்கிறது... ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் வடிவேலுவுக்காக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

லாரன்ஸ் வடிவேலு
நடிகர் வடிவேலு லாரன்ஸ் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். இப்போது சன் டிவி மேடையில் இருவரும் இணைந்து உள்ளார்கள். வின்னர் படத்தில் வரும் வடிவேலு காமெடியை இருவரும் பேசியுள்ளதோடு டான்சும் ஆடியுள்ளனர்.

பேச்சு பேச்சுத்தான்
கோட்டைத் தாண்டி இந்த பக்கம் வந்துட கூடாது..பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொல்ற காமெடியை வடிவேலுவுடன் இணைந்து லாரன்ஸ் பேசியுள்ளார். பின்னர் லாரன்சுடன் வடிவேலு டான்சும் ஆடியுள்ளார். வடிவேலு நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் என்று பாடிய பாடலுக்கு ராதிகாவைப் பார்த்து பாடினீர்களா என்று கேட்டு வம்பு இழுக்க..

தேவதைகளுடன் அவர்
அவர் தேவதைகளுடன் நிற்கிறார் என்று ராதிகா சொல்கிறார். நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.. என்னை ஏம்பா வம்புக்கு இழுக்கறீங்க என்று வடிவேலு கூறுகிறார். இப்படி வடிவேலுக்கு இந்த விழாவில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது சன் டிவி.

நிகழ்ச்சியை வடிவேலுவும்
வடிவேலுவும் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியை கலகலக்க வைத்து இருக்கிறார். அண்மை காலமாக வடிவேலு மேடை ஏறினாலே எல்லாரையும் சிரிக்க வைத்து அதகளம் பண்ணி விடுகிறார். விஜய் டிவியில் கமல் 60 நிகழ்ச்சியை அப்படித்தான் கலகலக்க வைத்து இருந்தார்.

வடிவேலுவுக்கு 2020
வடிவேலுவுக்கு 2020 ஆண்டு புதிய பட வாய்ப்புக்களை பெற்றுத் தந்து, நல்ல ஆண்டாக அமையுமா? அப்படி அமைந்து எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ வைக்கும் ஆண்டாக அமைந்தால் நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமான நல்ல ஆண்டாகவே அமையும்... காரணம் அவரது சீட் இன்னும் அப்படியே காலியாதான் இருக்கு.. அதை யாராலும் நிரப்ப முடியாதும் என்பது உண்மை.












Click it and Unblock the Notifications