ஒரிஜினல் "லஜக், மொஜக், பஜக்" இதுதான்.. ஆனால் வடிவேலு வேற லெவல் பாஸ்!
சென்னை: நடிகர் வடிவேலுவின் பிரபல காமெடியான லஜக், மொஜக், பஜக்கின் ஒரிஜினல் வெர்சன் இதுவாக இருக்கலாம்.
காமெடி கிங் என்றால் அது வடிவேலு என்பதை யாராலும் மறுக்க முடியாது. காமெடியுடன் அவர் செய்யும் உடல் அசைவு, முகப்பாவனை அந்த காமெடிக்கு மேலும் உயிரூட்டுகிறது.

இதனால் பாமர மக்களையும் அவரது காமெடி கொண்டு போய் சேர்த்தது. இவரது காமெடியில் எத்தனையோ இருக்க போக்கிரி படத்தில் வரும் லஜக், மொஜக் காமெடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
ஒரிஜினல் வெர்சன் ஆஃப் லஜக்,மொஜக்,பஜக். #VadiveluForLife pic.twitter.com/rQn1h9PwrP
— Hasan Kalifa (@smhrkalifa) September 19, 2018
படத்தில் கராத்தே மாஸ்டரான வடிவேல் வீட்டில்தான் நடிகை அசின் தனது தாய், தம்பியுடன் குடியிருப்பார். அவருக்கு அசின் மேல் ஒருதலை காதல். அவரது தம்பிக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் வடிவேல், அசினுக்கும் கராத்தே கற்றுக் கொடுக்க அவரை அழைப்பார்.
அப்போது அசின், அவரது தம்பி ஆகியோருக்கு வடிவேல் யாராவது தங்களை தாக்கினால் எப்படி அதை தடுப்பது என்பதை சொல்லிக் கொடுப்பார். அந்த சமயம் லஜக் என்றால் இப்படி அடிக்க வேண்டும், மொஜக் என்றால் இப்படி, பஜக் என்றால் இப்படி என்று சொல்லிக் கொடுப்பார்.
ஆரம்பத்தில் நன்றாக போகும். அவர் வேகமாக அந்த மூன்று வார்த்தைகளை சொல்லும் போது இருவரும் சேர்ந்து வடிவேலுவின் தலையில் அடிப்பர். இந்த காமெடியின் ஒரிஜினல் வெர்சன் இது என்று தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications