Thenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலை வலிக்குதுடா அம்பி.. நெத்தியில் பத்து போடுன்னு பக்கத்தாத்து பட்டு மாமி கேட்டா....எப்படி 10 கரெக்ட்டா போட்டு இருக்கேனா இல்லையான்னு அரசு படத்தில் பிச்சுமணியா நடிச்சு இருக்கும் நடிகர் வடிவேலு அந்த படத்தில் ஹீரோவாக நடிச்சு இருக்கும் நடிகர் சரத்குமாரிடம் கேட்பார். பலரையும் குலுங்கி சிரிக்க வச்ச காமெடி அது.

இதே போல ஒரு காட்சி விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் ப்ரோமோவில் வருகிறது. விஜய் டிவி இந்த சீரியலின் நேரத்தை இரவு 10 மணிக்கு என்று மாற்றி உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு இதுவரை தேன்மொழி பிஏ சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

விஜய் டிவியும் சன் டிவி சானல் மாதிரி மதிய நேரத்தில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சீரியல்களின் நேரத்தை மாற்றியும் அறிவித்து வருகிறது.புதிதாக மகாலட்சுமி என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நேரத்தில்தான் தேன்மொழி பிஏ சீரியலை இன்று முதல் இரவு 10 மணிக்கு என்று மாற்றி அறிவித்து வருகிறது.

அப்பத்தா நெற்றியில் 10

அப்பத்தா நெற்றியில் 10

தேன்மொழி பிஏ சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாவதை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக, தேன்மொழி அப்பத்தாவின் நெற்றியில் 10 போட்டுவிடுவதை காண்பித்து இருக்கிறார்கள். அதாவது டேய் அருளு.. இங்கே வா. உன் பொண்டாட்டி செய்து இருக்கற வேலையைப் பாருன்னு அப்பத்தா அருள்வேலை கூப்பிடறாங்க. என்ன அப்பத்தா என்று அருள் கேட்க, தலையை வலிக்குது லேசா பத்து போட்டுவிடுன்னு உன் பொண்டாட்டிகிட்டே கேட்டேன்.. அவ செய்து இருக்கற வேலையைப் பாருன்னு அப்பத்தா நெற்றியை மூடி வச்சு இருந்த புடவை விலக்க, அவங்க நெத்தியில் வடிவேலு போட்டுவிட்ட மாதிரி 10 என்கிற எண்.

என்னடி பண்ணி வச்சே

என்னடி பண்ணி வச்சே

ஏய் என்னடி பண்ணி வச்சேன்னு அருள் கேட்க, இல்லைங்க.. இன்னியிலேர்ந்து ராத்திரி 10 மணிக்குத்தானே தேன்மொழி பிஏ சீரியல் ஒளிபரப்பாக இருக்குது. அதுக்குத்தான் அப்பத்தா நெத்தியில் இந்த 10ன்னு சொல்றா தேன்மொழி. என்னதான் சினிமாவை காப்பி அடித்து இருக்காங்க என்றாலும், வடிவேலுவின் காமெடியை காப்பி அடிக்கலேன்னாத்தான் விஷயம் என்கிற நிலையில், இதுவும் ரசிக்கத்தான் வச்சு இருக்கு.

தேன்மொழி ஜாக்குலின்

தேன்மொழி ஜாக்குலின்

தேன்மொழி பிஏ சீரியலில் விஜய் டிவியின் தொகுப்பாளினியாக இருந்து, கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகை அந்தஸ்து பெற்று இருக்கும் ஜாக்குலின் தேன்மொழியாக நடிச்சு இருக்கார். இவருக்காக என்று தேன்மொழி பிஏ சீரியலைப் பார்க்க ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்றுவரை சீரியலை பார்த்து வருகிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவராக காந்திநகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் இருந்தால், என்ன நடக்கும் என்பதை விளக்கும் விதமாக தேன்மொழி பிஏ சீரியல் இருக்கிறது.

அரசு முத்து

அரசு முத்து

தேன்மொழி பிஏ சீரியலில் ஜாக்குலின் கதாபாத்திரம் மூலம் அவ்வப்போது காமெடியைப் புகுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சினிமா பாணியை, சினிமா வசனங்களை, காட்சிகளை காப்பி அடித்து சீரியலை ஒளிபரப்பி வந்தாலும், இதுவும் ஒரு நல்ல டிரென்டிங்காகத்தான் இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து படத்தின் காட்சிகளை அப்படியே சுட்டு சீரியலில் காண்பித்தார்கள். இப்போது அரசு படத்தின் வடிவேலு காமெடி அதன் ப்ரோமோவில் கற்பனை குதிரையை இப்படித் தட்டி ஓட விட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+