Roja Serial: வாயில வசம்பு வைக்க... சீரியல்னாலும் இப்படியா?
சென்னை: ரோஜா சீரியலில் வடிவுக்கரசி வாயில் வசம்பு வச்சு தேய்க்கன்னு சீரியல் ஆர்வலர்கள் திட்டும் அளவுக்கு, வடிவுக்கரசி பூஜாவின் அப்பா அம்மாவைத் திட்டறாங்க.
ஏற்கனவே நம்ம பொது ஜனத்துக்கு திட்டத் தெரியாது பாருங்க சீரியலில் வேற சொல்லித் தர்றாங்க.
இந்த காலத்துல நிஜத்தில் தெரியாதது எல்லாம் சீரியலில் நிறைய சொல்லித் தர்றாங்க. அது போலத்தான் சன் டிவியின் ரோஜா சீரியலில் வடிவுக்கரசி வாயில் வர்றதை சொல்லித் திட்டுவதும் இருக்கிறது.

ரோஜா சீரியல்
சன் டிவியில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் ரோஜா . இதில் அன்னபூரணி அம்மாவாக வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இவரது சின்ன பேரன் அஷ்வின் பூஜா என்று ஒரு பெண்ணை லவ் பண்ணுகிறார். அதற்கு இவர் பேரனை திட்டுவதற்கு பதில் அவர் லவ் பண்ணும் பூஜாவின் அம்மா அப்பாவை முதலில் ஒரு முறை மானம் போகும் படி பேசினார்.

கல்யாணமே வேணாம்
முதலில் பெண் கேட்டு வரும்போது மனம் போகும்படி பணக்கார பையனா பார்த்து பிடிக்கும்படி பெண்ணுக்கு சொல்லித் தந்து மேய விடுவீங்களா. என்னடா மானங்கெட்ட பொழப்பு இதுன்னு வாய்க்கு வந்தபடி பேசி அனுப்பியதால், பூஜாவின் அம்மா அப்பா இந்த சம்பந்தமே வேணாம்னு போய் விட்டார்கள். பூஜாவும் இந்த கல்யாணமே வேணாம் என்று முடிவு எடுத்து விட்டாள்.

ரிஜிஸ்டர் கல்யாணம்
அர்ஜுனும் ரோஜாவும் கொஞ்சம் கொஞ்சமாக பூஜாவின் மனசை மாத்தி இப்போது அஷ்வினுக்கும் பூஜாவுக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் வரை கொண்டு வந்து இருக்க இது தெரிந்து கொண்ட அன்னபூரணி அம்மா தனது பேத்தி அணுவுடன் அஷ்வினுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று மறுபடியும் பூஜாவின் அப்பாவுக்கு போன் போட்டு மானம் போகும்படி பெண்ணை மறுபடியும் பணக்காரனை பார்த்து பிடிக்க மேய விட்டுட்டியான்னு கேட்கறாங்க.

கதைக்கு என்றாலும்
கதைக்கு என்றாலும் இப்படிப்பட்ட வசனங்களை காது கொடுத்து கேட்க முடியலை. முதலில் இப்படிப்பட்ட வசனங்களை தவிர்க்கலாமே. பெண் காதலித்தால் அவளின் அப்பா அம்மா என்ன செய்வாங்க. அது இருக்கட்டும்.. உங்கள் பேரனை அல்லவா கண்டிக்க வேண்டும்? அடுத்தவரின் பெண்ணையோ, அவளின் அப்பா அம்மாவையே திட்டும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?
சமூகத்தில் இதை எல்லாம் மாற்றப்பட்ட வேண்டிய ஊடகமே இதை செய்தால் என்னத்த சொல்ல?
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications