GOAT படத்தில் பைக் சீனில் நான் உட்கார்ந்ததுமே விஜய் சார் இறங்கிட்டாரு! நடிகர் வைபவ் சுவாரஸ்யம்
சென்னை: தல தளபதி கூட பைக்கில் போன ஒரே ஆள் நான்தான் என நடிகர் வைபவ் தெரிவித்துள்ளார். இருவருடனும் பைக்கில் சென்ற அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இவர் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
வைபவ் ரெட்டி, இவர் தெலுங்கு திரைப்பட இயக்குநர் கோதண்டராமி ரெட்டியின் மகன். இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சரோசா, கோவா ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்தார். 2011 ஆம் ஆண்டு மங்காத்தா என்ற படத்தில் நடித்திருந்தார். மங்காத்தாவில் ஒரு சண்டைக் காட்சியில் அஜித் குமார் பைக்கில் செல்வார். அப்போது அவரது பின்னால் வைபவ் உட்கார்ந்து வருவார்.
இதுகுறித்து வைபவ் கூறுகையில் தல அஜித் பின்னால் அந்த காட்சியில் உட்கார்ந்து வரமுடியவில்லை. அந்த அளவுக்கு பயமாக இருந்ததால் நடிகர் அஜித்தை கட்டிப் பிடித்துக் கொண்டு இரு கண்களையும் மூடிக் கொண்டு நடித்தேன் என பேட்டியளித்தார். இதில் அஜித் வீலிங் எல்லாம் செய்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது வைபவ் கோட் திரைப்படத்தில் மகன் விஜய் பைக்கில் செல்லும் போது அவருடனும் வைபவ் பின்னால் உட்கார்ந்து செல்லும் காட்சி அமைந்திருந்தது. இதுகுறித்து வைபவ் காமெடியாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தல, தளபதி கூட பைக்கில் போன ஒரே ஆள் நான்தான்.
கோட் படத்தில் நானும் வெங்கட் பிரபு அண்ணனும், நீங்கள் ஓட்டி அவன் பின்னாடி உட்கார்ந்தாதான் நல்லா இருக்கும் என விஜய் சாரிடம் சொல்லி பைக்கை ஓட்ட வச்சோம். பைக்கில் நான் பின்னாடி உட்கார்ந்த உடனேயே, ஓஹோ நீங்கள் அங்க கனெக்ட் (மங்காத்தா சீன்) பண்றீங்களா என கேட்டுவிட்டு பைக்கில் இருந்து கீழே இறங்கிட்டாரு.
அப்புறம் பிரபு வா என கூப்பிட்டு, நீங்கள் எல்லாம் யாருடா, அவரோட (அஜித்) இவன் (வைபவ்) பைக்கில் பின்னாடி உட்கார்ந்து போனான். இப்ப என் கூடவும் பின்னாடி உட்கார்ந்து போகணும். இது புரியாம நம்மளதான் ஹீரோ மாதிரி ஓட்ட சொல்றாங்கன்னு இருந்தேன் என்று விஜய் சார் சிரிச்சிட்டாரு என வைபவ் தெரிவித்தார்.
வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, நடிகர் ஜெய் எல்லாம் நண்பர்கள். வெங்கட் பிரபு எடுக்கும் படங்களில் வைபவ் இருப்பார். அத்துடன் வைபவ், ஆம்பள படத்திலும் அரண்மனை படத்திலும் நடித்திருந்தார். மாசிலாமணி என்ற படத்தில் பேய் போல் வேடமிட்டு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். சுந்தர் சியின் முத்தின கத்திரிக்காவிலும் சிறப்பு தோற்றம்தான். காமெடி காட்சிகளில் வைபவ் சிறப்பாக நடிப்பார்.
-
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்!












Click it and Unblock the Notifications