என்னவளின் கைகளில் வளையல் இட்டு! நாஞ்சில் விஜயன் மனைவி மரியாவுக்கு வளைகாப்பு
சென்னை: விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நாஞ்சில் விஜயன் மனைவி மரியாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
கலக்க போவது யார் நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். எந்த கேரக்டராக இருந்தாலும் கச்சிதமாக நடித்து விடுவார். நாஞ்சில் விஜயன் கலர்ஸ் தமிழ் சேனலில் வள்ளித் திருமணம் சீரியலிலும் நடித்திருந்தார். சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் ஆனது. திருமணமாகியும் தனது மனைவியுடனும் இன்ஸ்டாவில் காமெடி வீடியோக்களை போட்டிருந்தார். திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் அவர்கள் குழந்தைக்காக எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இனிமே எங்க வீட்லயும் விசேஷம்தான். மரியா கர்ப்பமாக இருக்கிறார். நான் அப்பாவாக போகிறேன். என் மனைவிக்காகவும் எங்கள் குழந்தைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மரியாவுக்கு நேற்று வளைகாப்பு நடந்தது. இதுகுறித்து நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிாாம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உறவுகளும் நட்புகளும் ஒன்று கூடி மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் இரு, உன்னோடு இத்தனை சொந்தங்கள் இருக்கிறோம் என்று கூறி என்னவளின் கைகளில் வளையல் இட்டு வாழ்த்திய தருணம் என நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்வுக்கு ரோபோ சங்கர், பிரியங்கா, இந்திரஜா, கார்த்திக் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்த நிகழ்வில் மரியாவுக்கு நலங்கு வைக்கப்பட்டு வளையல்கள் போடப்பட்டன. மரியாவுக்கு நாஞ்சிலின் தங்கை மாலை அணிவித்து உட்கார வைத்தார். பிறகு ஒவ்வொருவராக வந்து நலங்கு வைத்து வளையல் போட்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் போட்டோஷூட்டும் எடுக்கப்பட்டது. அநேகமாக மரியாவுக்கு இது 5ஆவது மாதமாக இருக்கும் என தெரிகிறது. அடுத்த ஆண்டில் அவர்களுக்கு குழந்தை பிறக்க போகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டு சினேகன் மனைவி கனிகா, ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, நாஞ்சில் விஜயன் மனைவி மரியா உள்ளிட்டோருக்கு குழந்தை பிறக்க போகிறது.
இந்திரஜா- கார்த்திக், நாஞ்சில்- மரியா ஆகியோர் ஒரே குடும்பத்தினர் போல நெருக்கமானவர்கள், கார்த்திக் மரியாவை தங்கையாகவும் நாஞ்சில் இந்திரஜாவை தங்கையாகவும் கருதி ஒரே குடும்பமாக பழகி வருகிறார்கள். மேலும் ராக்கி பண்டிகையின் போது கூட இந்திரஜாவும் மரியாவும் நாஞ்சிலுக்கும் கார்த்திக்கிற்கும் ராக்கி கட்டி ஆசி வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications