வள்ளியின் வேலன்: ரஞ்சித் போட்ட சபதம்.. ரேணுகா வாங்கிய சத்தியம், வேலன் கொடுத்த பல்பு, நடந்தது என்ன?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்தி வேலனுக்கு போன் செய்து வீட்டில் பிரச்சனை என்று சொல்ல வள்ளியும் வேலனும் கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வள்ளியும் வேலனும் வீட்டிற்கு வர ஆனந்தி மேலே வர சொல்ல, வேலன் அங்க எதுக்கு என்று கேட்க, இங்க தான் பிரச்சனை என்று சொல்கிறாள். பிறகு இருவரும் மேலே வர ரேணுகா ரொம்ப நேரமாக கதவை திறக்கவில்லை என்று தெரிய வருகிறது.

ரேணுகாவின் அப்பா எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம், நீ அவனமானப்பட்டா என் பொண்ணு சாகணுமா என்று கோபப்பட வேலனும் அவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது, வள்ளி வேலனை கூல் செய்து அந்த பொண்ணை வெளியே வர சொல்லு என்று சொன்னதும் வேலன் ரேணுகாவை கூப்பிட கதவை திறந்த அவள் வெளியே வந்து வேலனை ரூமுக்குள் அழைத்து செல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ரேணுகா வேலனிடம் நீ யாரையும் லவ் பண்ணல தானே என்று கேட்டு வேலனும் இல்லை என்று சொல்ல ரேணுகா யாரையும் லவ் பண்ணலன்னு சத்தியம் கேட்க வேலனும் சத்தியம் செய்கிறான். அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ரத்தினவேல் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலுக்கு கிளம்புகின்றனர்.
ரஞ்சித் வேதநாயகியிடம் கோவிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள வள்ளியை எப்படி கரெக்ட் பண்றேன் பாரு என்று சவால் விடுகிறான். ரத்தினவேல் ஒரு காரில் ஏற ரஞ்சித் வள்ளியை தனது காரில் ஏற சொல்ல அவள் குட்டியானை வண்டியில் வேலனுடன் ஏறி செல்கிறாள்.

அடுத்து கோவிலுக்கு வந்த வேதநாயகி ஆளுக்கு ஒரு வேலையாக சொல்லி பிரித்து அனுப்ப குட்டியானை வண்டியில் வள்ளியும் வேலனும் வருவதை பார்த்து ரஞ்சித் கடுப்பாகிறான். ரத்தினவேல் வந்ததும் மாமா இந்த கோயிலில் நீங்க என்ன கேட்டாலும் குடுப்பீங்களாமே என்று எதையோ கேட்க வருகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications