Vanakkam Thamizha Programme: இன்னும் இளமையோடு இளமை புதுமை ஸ்வர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சி தினம் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது.சிறப்பு விருந்தினர் வருகை, பெண்கள் ஃபிட்னெஸ், டாடி சமையல், கல்யாணமாம் கல்யாணம் என்று பல்சுவை நிகழ்ச்சிகள் கலந்த கலவை இது.

பல வருடங்களுக்கு முன்னர் சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் இன்றைய சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அலைபாயுதே, எங்கள் அண்ணா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

ஜாலி அனுபவம்

ஜாலி அனுபவம்

அப்போது சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சி ரொம்ப ஜாலியான யூத் நிகழ்ச்சியாக முதன் முதலில் ஒளிபரப்பானது. இப்போ இருப்பது போல அப்போது சமூக வளைத் தளங்கள் இல்லை என்றாலும், அவ்ளோ ஃபேன்ஸ் இருந்தாங்க. ஒரு நாள் ஒளிபரப்பு நேரத்தின் போது, என்னுடன் சேர்ந்து எனது நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று 50 ரசிகர்கள் எங்கள்வீட்டின் முன் கூடி இருந்தார்கள். அதை என்னால் மறக்கேவ் முடியாது.

டான்ஸ் மட்டும்தான்

டான்ஸ் மட்டும்தான்

நான் மூணு வயசிலேயே பரதம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். வேற எந்த கோல் எதுவும் இல்லாமல் வளர்ந்தேன். காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சி வாய்ப்பு வந்துச்சு. அப்போதுதான் மணிரத்னம் அலைபாயுதே படத்தில் நடிக்க அழைச்சார். எனக்கு படிப்புதான் முக்கியம்னு சொல்லிட்டேன். இளமை புதுமை யூனிட்ல எல்லாரும் திட்டினாங்க.

கிரேட் இயக்குநர்

கிரேட் இயக்குநர்

கிரேட் டைரக்டர் மணி சார்.அவர் படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்றே..ஒத்துக்கோன்னு சொன்னாங்க. சரின்னுதான் நடிச்சேன். உண்மையில் நீ அழகா இருக்கேன்னு நினைக்கலே சீனில் எனக்கு வேலையே இல்லை. டிரெயின்ல எனக்கு நிக்க இடமில்லை. அதனல ஷாலினி பக்கத்துல போயி நின்னுட்டேன். அப்புறம் அதே சீனில் மாதவன் ஷாலினிகிட்டே பேசின டயலாக்கை நானும் பேச நேர்ந்தது.அப்போது எனக்கு ஒண்ணும் தெரியலை..அதுக்குப் பிறகு இப்போது பார்த்தாலும் நல்லாயிருக்கு.

படிச்சுக்கிட்டே இருப்பேன்

படிச்சுக்கிட்டே இருப்பேன்

பிறகு எங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு.எப்போதும் அழுகை அழுகைன்னு அண்ணன் தங்கை சென்டிமென்ட்.. கிளிசரின் இல்லாம எனக்கு சீன் இருக்காது.ஒரு கட்டத்தில் டைரக்டர்கிட்டே போயி, சார் எனக்கு அழுகையே வர மாட்டேங்குது. கிளிசரின் இல்லாம சீன் வைக்க முடியாதான்னு கூட கேட்டுட்டேன். ஷாட் இல்லேன்னா ரொம்ப படிச்சுக்கிட்டே இருப்பேன்.கூட இருக்கறவங்க கலாய்ச்சு, என்னை பேச வைப்பாங்க.உண்மையை சொல்லனும்னா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த படம் நடிச்சேன்.நல்ல பேர் வாங்கித் தந்த படம் அது என்று கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+