அய்யய்யோ.. இது மூடி மறைக்கிற விஷயமா? வானத்தைப்போல சீரியலின் சொதப்பலை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வருகிறது.
டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் பல மாதங்களாக தொடரும் சொதப்பல்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்கள் என்றாலே அங்கே திரைப்படங்களை காப்பியடிப்பதும், ஒரு சீரியலின் கதையை இன்னொரு சீரியலில் கொண்டு வருவதும் புதியது அல்ல. டிஆர்பி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாரமும் கதைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஆரம்பிக்கும்போது இருந்த கதை பாதியிலே வேறு விதமாக போவது வழக்கமானது தான்.
ஆனால் சில சீரியல்களில் தங்களுடைய டிஆர்பி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் முட்டாளாக நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு கதையை கொண்டு போய்க் கொண்டிருப்பது தான் அடிக்கடி ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஆமாங்க அந்த வரிசையில் வானத்தைப்போல சீரியல் இடம் பிடித்திருக்கிறது. சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்டு நடிகர் விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தின் டைட்டிலை இந்த சீரியலிலும் வைத்தனர். ஆரம்பத்தில் இந்த சீரியல் பார்த்து பலர் கண்கலங்கியவர்களும் உண்டு.
அடடா இப்படி எல்லாம் ஒரு அண்ணன் தங்கையா என்று பலர் மெச்சி கொண்டு இருந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல இந்த சீரியலில் அடுத்தடுத்து நடிகர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் தான் சில மாதங்களாகவே ஒரு பொய்யை மறைக்கிறேன்னு சொல்லி சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட வைத்திருக்கிறார்கள்.

இதை படிக்கும்போதே இந்த சீரியலை பார்க்கும் பலருக்கும் புரிந்திருக்கும். நாம எதை பற்றி பார்க்க போறோம் என்பது, இந்த சீரியலில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக துளசி தன்னுடைய வயிற்றில் குழந்தை அபார்ஷன் ஆன விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வருகிறார். ஆனால் அவர் வயிறு இன்னும் தெரியவில்லையே என்று வீட்டில் இருப்பவர்கள் யாரும் கேள்வி கேட்கவே இல்லை. அதை கவனிச்சீங்களா...?
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்கான எபிசோடில் துளசியின் குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது என்று டாக்டர் மருத்துவமனையில் கூறி இந்த விஷயத்தை உங்க வீட்டில் இருக்கவங்க கிட்ட சொல்லிருன்னு சொல்லி இருக்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்து வீட்டில் சொல்வதற்கு துளசி முயற்சி எடுக்கும் போதெல்லாம் ஏதாவது தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது.
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் 2022 தேதி எபிசோடில் டாக்டர் துளசியிடம் நீ இன்னும் உங்க வீட்டில் அபார்ஷன் ஆனதை சொல்லலையா என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகும் துளசி யாருகிட்டயுமே சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய மாமியாரிடம் தன்னுடைய குழந்தை அபார்ஷன் ஆகிட்டுன்னு சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது துளசிக்கு அபார்ஷன் ஆகி ஒன்பது மாதங்களாக ஆகின்றது. வீட்டில் மாமியார் தவிர வேறு யாருக்கும் தெரியாது ஆனாலும் துளசியின் வயிறு தெரியலையேன்னு யாரும் கேட்கல. இது மூடி மறைக்கிற விஷயமா? கதையா இருந்தாலும் ஒரு நியாயமா வேண்டாமா? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம கதை போய்க்கிட்டு இருக்கு. இது என்னைக்கு தான் முடிவுக்கு வரும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications