அழகுக்கு நிகர் அழகு நீயே வந்தனா.. உருகும் ரசிகர்கள்.. வாஸ்தவம்தானே!
சென்னை: பெரிய திரை நடிகைகளுக்கு செம டப் கொடுக்கிறார் நம்ம சின்னத்திரை நாயகி வந்தனா மைக்கேல்.
முன்னாடி மாதிரி இல்லாம இப்ப எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டியாக சின்னத்திரை நடிகைகளும் அழகழகாக புதுசு புதுசா வந்துட்டு இருக்காங்க .இதில் இருந்து தன்னுடைய திறமையை நிரூபித்த சின்னத்திரை நடிகைகள் நாளுக்கு நாள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல்.

ஆனந்தம் சீரியல்
அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர் .இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.

வில்லியாக கலக்கல்
அதன்பிறகு அவருடைய திறமையை நிரூபிப்பதற்காக பல சீரியல்களில் வில்லி கேரக்டர் ஆகவே நடித்துக்கொண்டிருந்தார் அதுதான் அவருக்கு நடிப்பின் உச்சகட்டமாக இருந்தது ஆனால் இவர் ரியல் லைப்பில் ரொம்ப காமெடி பீசாம் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் கலாய்த்து ஜாலியாக இருப்பாராம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவராம்.

புன்னகை மட்டும் சிந்துவேன்
ஆனால் இவர் நடிப்பதை உண்மை என்று நம்பி இவர் வெளியே செல்லும் இடங்களில் சில ரசிகர்கள் ஏம்மா இப்படி எல்லாம் பண்ணுற என்று ரொம்ப வெகுளியாக கேட்பார்களாம். அது இவருக்கு சிரிப்பு தான் வருமாம். அதற்கு புன்னகையை மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவாராம். அவர் நலனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மைக்கேலிடம் மலர்ந்த காதல்
இவர்கள் திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் விமர்சனமாக நடைபெற்றது இன்று வரையிலும் தன் காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்திருப்பார். இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து இருப்பார். இந்த சீரியலுக்கு பிறகுதான் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

செல்லமே
இதற்கு பிறகு இவர் நடித்த ரெக்க கட்டி பறக்குது மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, செல்லமே அப்படி எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டர் தான் நடித்தார்கள். இப்போ லாக்டவுன் என்கிறதால படப்பிடிப்பு இல்லாததனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக் மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். வயசானாலும் உங்க வாலிபம் குறையல அப்படின்னு ஜொள்ளு வடிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications