வந்தனான்னு சொன்னதும்.. ஆறாகப் பெருகி ஓட விடுகிறார்களே ரசிகர்கள்!
சென்னை: வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது கதாநாயகிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர்.
என்னதான் புதுசு புதுசா அறிமுகமானாலும் சின்னத்திரையில் வந்தனா என்று பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான முகம் அவர்தான் சின்னத்திரையின் வில்லியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும் பிறந்த நாள் அதுவுமாக அவர் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.

ஆனந்தம் சீரியலில் கலக்கல்
இவர் முதன்முதலில் அறிமுகமான ஆனந்தம் சீரியலில் டெல்லி கணேசனின் மகள் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். முதல் சீரியலே ரசிகர்களின் மனதை கவர்ந்த குட்டி பெண்ணாக வலம் வந்தார். ஆனால் அதற்குப் பிறகு இவர் தனது திறமையை நிரூபிப்பதற்கு பாசிட்டிவ் கேரக்டரை விடவும் நெகட்டிவ் கேரக்டரில் தான் அதிக வாய்ப்பு கிடைத்தது.

பெஸ்ட் வில்லி
அது மட்டுமல்லாமல் தன்னுடைய உயரத்திற்கும் உடல் அமைப்புக்கும் வில்லத்தனம் தான் பக்காவாக செட் ஆகிறது என்று வில்லத்தனத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் சீரியலில் மிரட்டும் அளவிற்கு வில்லத்தனத்தை செய்து கொண்டிருக்கும் இவர் உண்மையில் ஒரு பெரிய காமெடி பீசு தானாம் .சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஜாலியாக கிண்டல் பண்ணி கலாய்த்து கொண்டு இருப்பார்.

வெட்கம்
ஆனாலும் கொஞ்சம் அமைதியானா ஷை டைப் தானாம். இருந்தாலும் இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் விமர்சனமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டு இவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.

காதல் அப்படியே இருக்கு
இப்ப வரைக்கும் இவர்கள் அதே காதலோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவருக்கு வில்லத்தனத்தில் மட்டுமல்லாமல் வீட்டு விலங்குகள் வளர்ப்பதிலும் அதிகமான ஆர்வம் இருக்கிறதாம். ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது கூட தெருவில் ஏதாவது நாய் அடிபட்டு இருந்தால் உடனே தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவாராம்.

நாய் மீது பாசம்
அவங்க அம்மா எவ்வளவு தான் திட்டினாலும் இவர் கேட்பதே இல்லையாம். அந்த அளவிற்கு பிற உயிர்களிடத்திலும் பாசமாக இருப்பாராம். ஆனந்தம் சீரியலுக்கு பிறகு இவருக்கு அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்தது. தங்கம் சீரியலில் தான். இந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இவர் நடித்திருந்தார். இந்த சீரியலின் அவரது வழக்கமான வில்லதனம் கேரக்டர் தான் இருந்தாலும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆகி இருந்தது.

வாயை விட கண்ணு பவர்புல்!
மொத்த வில்லத்தனத்தையும் வாயை திறந்து பேசாமலே கண்களாலேயே காட்டி விடும் திறமை இவருக்கு இருப்பதால் எந்த சீரியலிலும் வில்லி கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார் .அந்த மாதிரிதான் கல்யாணம் முதல் காதல் வரை, ரெக்க கட்டி பறக்குது மனசு, மெல்லத் திறந்தது கதவு அப்படி பல சீரியலில் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மழையா பெய்யும் லைக்ஸ்
என்னதான் சீரியலில் பிசியாக கலக்கிக்கொண்டு இருந்தாலும் தற்போது இவரது பிறந்த நாளுக்கு இவர் கண்ணாடி போன்ற ஒரு உடையில் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்ஸ்டாகிராமில் தரிசனத்தைக் காட்டி இருக்கும் இவருக்கு லைக்களையும் கமெண்ட்டுகளையும் மழையாக பொழிந்து வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications