பிறந்த நாள் அதுவுமா கையில அதை வச்சுகிட்டு என்ன அங்க போய் உட்கார்ந்துட்டீங்க!
சென்னை: பலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து கலக்கி இருக்கிறார்கள் .அதில் ஒரு சிலர் மட்டும்தான் சின்னத்திரையில் ஜெயித்து வெள்ளித்திரைக்கு சென்றிருக்கிறார். அதில் ஒருவர்தான் வாணி போஜன்.
தெய்வமகள் சீரியலில் சத்தியாவாக அறிமுகமாகி தற்போது சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருக்கும் வாணி போஜன் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அதுவும் மலை மீது உட்கார்ந்து கொண்டாடியிருக்கிறார்.
அப்படி அவர் தனது பிறந்த நாளையொட்டி கலக்கலாக கேக் வெட்டி எடுத்திருக்கும் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது

இன்னும் அதே சத்யாதான்
தெய்வமகள் சீரியலில் சத்தியாவாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து விட்டார். இப்ப வரைக்கும் பலரும் இவரை சத்யா என்று தான் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு போல்டான ஒரு கேரக்டரில் படு கச்சிதமாக இவருக்கு பொருந்துகிற அளவில் நடித்துவிட்டார். அதற்குப் பிறகும் அவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு தெய்வமகள் சீரியல் தான் டாப் .

சத்யாவின் ரசிகர்கள்
இந்த சீரியலில் இவர் கிராமப்புறங்களில் முதல் நகரங்கள் வரை அனைவரும் ரசிக்கும் அளவில் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். தற்போது இவர் வெள்ளித்திரையில் மின்னி கொண்டிருந்தாலும் பலர் இவரை சத்யா என்றுதான் அழைக்கின்றனர். இவருக்கு பிளஸ் பாயிண்டு இவருடைய க்யூட்டான நடிப்புதான். பல நடிகைகள் சினிமாக்களில் அறிமுகமாகி தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

சின்னத்திரை நயன்தாரா
இவர் சீரியலில் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் பல படங்களில் மின்னிக் கொண்டு இருக்கிறார். அதோடு க்யூட்டான நடிப்போடு ரசிகர்களை கவருவதால் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவர் அடிக்கடி நயன்தாராவை காபி பண்ணுவது போல தான் நடை உடை பாவனைகளையும் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் இறங்கி நடித்திருக்கிறார்.

மீரா அக்கா
வெள்ளித்திரையில் ஓ காதல் கண்மணி படத்தில் மீரா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் வரை மீரா அக்கா என்றுதான் அழைக்கிறார்கள் .இவர் அந்த படத்தின் ஹீரோவுக்கு மட்டும் கிரஸ் அல்ல பல இளைஞர்களின் மனதிலும் கிரஸ்ஸாக தான் இருந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் அவருடைய ரசிகர்கள் இவருக்காக கமெண்ட் மலைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

வாணிக்கும் உண்டு ஆர்மி
அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இவருக்காக பல ஆர்மி களையும் உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது இவர் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் .இவருடைய பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வரிசை கட்டிக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

அக்கா அக்கான்னு
அதிலும் இளைஞர்கள் தான் ஹாப்பி பர்த்டே அக்கா அக்கா என்று சொல்லி இவரை கொஞ்சம் கடுப்பேத்துகிறார்கள். அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோஸ் அனைவரும் ஹாப்பி பர்த்டே அக்கா என்று தான் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .அதிலேயும் பலர் மீரா ஹாப்பி பர்த்டே என்றும் கூறிவருகிறார்கள்.

கொஞ்சும் இளமை
பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறாரே தவிர எத்தனாவது பிறந்தநாள் என்று தெரியவில்லை. வயது ஆக ஆக இவருக்கு இளமை மட்டும் குறைந்துகொண்டே வருகிறது என்று பல ரசிகர்கள் கருத்துக்களை போட்டிருக்கிறார்கள். மஞ்ச கலர் உடையில் பிளாக் பாரஸ்ட் கேக் வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டிவிடும் வகை விதமாக கேக்கை தூக்கி காட்டுகிறார்.

கையில் பூங்கொத்துடன்
கையில் ஒரு பூங்கொத்தை யும் வைத்துக் கொண்டு தனியாக மலை மீது உட்கார்ந்து போட்டோக்களை எடுத்து இருக்கிறார். பலர் வாழ்த்துக்களை கூறினாலும் சிலர் கேக்கை பார்த்து எச்சில் ஊறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வாணி போஜன் சினிமாவுக்குப் போனாலும் அவரை பின் தொடரும் ரசிகர்கள் கூட்டமாகவே இருந்து கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications