Vani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்!
சென்னை: திரைத்துறையை பொருத்தவரையில் தினமும் புதுமுகங்கள் அறிமுகமாகி கொண்டுதானிருக்கிறார்கள். சிலர் முதல் படங்களில் டாப்ல வருவதும் சிலர் இருந்த இடம் தெரியாமல் சென்று விடுவதும் வழக்கம் தான்.
ஆனால் சின்னத்திரையில் கதாநாயகி ஆகி அங்கிருந்து வெள்ளித்திரையில் வந்தவர்கள் பலர் அதில் நம்ம வாணி போஜன் ஒருவர். வாணி போஜன் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
அது ஏன்னா நயன்தாரா மாதிரி க்யூட்டா மேக்கப் போடட்டாலும் கூட அழகா இருக்கிறார் இல்லையா.. அதனாலதான் இவருக்கு இந்த செல்லப் பெயர். ஆரம்பத்தில் வாணி ஒரு ஃபேஷன் மாடலாக தான் இருந்திருக்கிறார் . பிறகுதான் சீரியல் பக்கம் திரும்பி வந்தார்.

காஞ்சனா வழியில்
காலேஜ் முடிச்சதும் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டஸாக ஆக வேலை செஞ்சுட்டு இருந்திருக்கிறார். இவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் மாடலிங்கில் இருந்ததால் இவங்க பிரண்ட்ஸ் கூட சேர்ந்து தான் இவரோ மாடல் வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் பண்ணிக்கிட்டு இருக்கும்போது 2015 ஆம் ஆண்டில் மாயா என்ற ஜெயா டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. மாயாவில் நடித்த பிறகுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரிலும் நடித்து இருக்கிறார்.

தெய்வமகள்
சன் டிவியில் 2013ஆம் ஆண்டில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருக்கும் இவரது ஜோடியாக நடித்த கிருஷ்ணாவுக்கும் புது லைப் கொடுத்தது. இந்த சீரியல் தான் இவங்க இருவரையுமே நிறையப் பேருக்கு அடையாளம் காட்டியது. இருவரையுமே ரசிகர்கள் நன்றாக ஆதரித்தார்கள். இவங்க இரண்டு பேருக்கும் நல்ல கெமிஸ்ட்ரியும் கூட.

தெய்மகள் சத்யா
இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் பெண்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது. பெண்களுக்கு நல்ல தைரியமும் ஊக்கமும் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். இது முழுவதும் இவருக்கு சூட்டான மாதிரி தான் இருந்தது. இதில் தாசில்தாராக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரைப் பார்த்து பெண்கள் மட்டுமல்ல ஆண் ரசிகர்களும் அதிகமாக கிடைத்தார்கள்.

லட்சுமி வந்தாச்சு
தெய்வமகள் சீரியலில் சிறப்பாக நடித்தமைக்காக இவருக்கு ஆனந்த விகடனின் சிறந்த கதாநாயகியான விருதும் கிடைத்திருக்கிறது. ரொம்ப மக்களால் பார்க்கப்பட்ட சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று. எல்லா எபிசோடும் ஒரு மில்லியன் யூடியூப் காட்சிகளை எட்டியுள்ளது. இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்பிறகு லட்சுமி வந்தாச்சு சீரியல். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதுவும் வாணிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

யோகாவும் தெரியுமாம்
இந்த சீரியலிலும் இவரது கேரக்டர் போல்டான கேரக்டர் ஆக தான் இருந்தது. அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் சீரியல் நடிகை இவர்தான் ஒரு நாளைக்கு ரூபாய் 25000 ரூபாய் சம்பளமாம். வாணி நடிகர் தனுஷின் மிகப்பெரிய ரசிகராம். அதுபோக வாணி போஜன் ஒரு யோகா ஆசிரியரும் கூட. மலேசிய தொலைக்காட்சி சேனலில் யோகா நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். வாணிக்கு மிகப்பெரிய அளவில் பெண் ரசிகர்கள் இருக்காங்களாம்.

மீரா அக்கா
சின்னத்திரையில் கலக்கி விட்டு இப்ப வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஓ மை கடவுளே படத்தில் மீரா கேரக்டரில் நடித்திருப்பார். இந்த இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாயிற்று. அந்த படத்தில் இவரை மீரா அக்கா தான் எல்லாரும் கூப்பிடுவார்கள். ஹீரோவின் கிரஸ் ஆக நடித்திருப்பார். ஒவ்வொருத்தர் லைஃப் ல யும் ஒருத்தங்க மேல இப்படித்தான் எல்லாருக்கும் கிரஸ் இருக்கும். அதுபோல இந்தப் படமும் அமைந்ததால் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடிச்சு பிடிச்சு போயிடுச்சு.

தக்காளி போல இருக்காராம்
இப்போ சூட்டிங் இல்லாத காரணங்களால் வீட்டில் இருந்து கொண்டு இவர் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக ன் அமைந்திருக்கிறது. இவர் போட்டோஸ் போட்டு அரை மணி நேரத்திற்குள் லைக் கமெண்ட் மழையை பொழிகிறார்கள். இப்போ சிவப்புநிறத்தில் அட்டகாசமாக அவர் போட்டுள்ள போட்டோஸ் பார்த்து தக்காளி போல இருக்கீங்கன்னு உருகிக் கொண்டுள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications