அந்த மச்சத்தைப் பார்த்தீங்களா.. நான் பார்த்தேனே.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: ரொம்ப போரடிக்குது அதுதான் அப்படியே கேஷுவலாக ஒரு கிளிக் என தன்னோட ரசிகர்களுக்காக ஸ்லீவ்லெஸ் உடையில் சூப்பர் போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன்.
பார்த்துப் பார்த்து உடல் எடையை குறைத்து இருக்கும் வாணி போஜனின் இந்த அழகான போட்டோவில் அவரது மச்சம்தான் ரசிகர்கள் கண்ணில் பளிச்சென பட்டுள்ளதாம்.. பொங்கிப் பொங்கி ரசிக்கிறார்கள்.
சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து அங்கும் தன்னுடைய வெற்றிக் கொடியை நாட்டி வருகிறார் .

தெய்வமகள் சீரியல்
இருப்பினும் இவர் முதலில் பிரபலமான தெய்வமகள் சத்யாவாக தான் பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார் .காலேஜ் முடித்ததும் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் நடிப்பின் மீது தனக்கிருந்த ஆசையால் பாத்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார். முதல் மாடலிங் வாய்ப்பு இவருக்கு சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் தான் கிடைத்திருக்கிறது.

மாயா சீரியல்
விளம்பரத்தில் இவருடைய ஹோம்லியான முகத்தை பார்த்ததும் இவருக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .ஆனால் அதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான் இவருடைய நடிப்புக்கு மைல்கல்லாக அமைந்து இருந்தது. அவருடைய பெயரயே மறந்து ரசிகர்களின் மனதில் சத்தியாவாக தான் பதிந்து இருக்கிறது.

லட்சுமி வந்தாச்சு
அந்த அளவிற்கு அந்தக் கதையோடு 5 வருடம் அதாவது 2013 முதல் 2018 வரைக்கும் வாழ்ந்திருக்கிறார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜீ தமிழில் மூன்று கேரக்டரில் ஒரே சீரியலில் கலக்கி இருந்தார் .லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் லட்சுமி ,நந்தினி ,ஜான்சி என்னும் மூன்று கேரக்டரில் சீரியலிலும் திரைப் படத்திற்கு இணையாக நடித்திருந்தார்.

நிகழ்ச்சிகளில் நடுவர்
சீரியல் நடிகையாக நடித்து கொண்டிருந்தவர் அதற்குப் பிறகு நடுவராகவும் சில நிகழ்ச்சிகளில் கலக்க ஆரம்பித்து விட்டார் .அசத்தல் சுட்டிஸ் எனும் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகளையும் கவர்ந்துவிட்டார் .சீரியலில் இவரை வீட்டுப்பெண்கள் ரசித்து வந்தனர். இணையதளத்தில் இளைஞர்களும் நகைச்சுவை ஜூனியர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர் .

நயன்தாரா ரேஞ்சு
சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த இவர் இதற்கு பிறகுதான் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்து அங்கும் ரசிகர்களின் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார். இவருக்கு தமிழ்நாடு தொலைக்காட்சி விருதுகள் ,சன் குடும்ப விருதுகள் ,விகடன் விருதுகள் ,அவள் விருதுகள் என மொத்தம் பதினோரு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது .இதுவும் இவருடைய பெரிய சாதனைதான் .

அடிக்கடி போட்டோஸ்
என்ன தான் இவர் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டிருந்தாலும் தான் வந்த இடத்தை மறக்காமல் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அடிக்கடி போட்டோக்களை எடுத்து போஸ்ட் போட்டு வருகிறார். தற்போது இவரை சீரியலில் அதிகமாக காணவில்லை என்று குழம்பித் தவிக்கும் ரசிர்கள் எப்போது சீரியலுக்கு மீண்டும் வருவார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தற்போது இன்ஸ்டாகிராமில் கேஷுவலாக தன்னுடைய க்யூட் அழகினை ஸ்லீவ்லெஸ் உடை யில் காட்டி இருக்கிறார்.

ஜாலியாக ஒரு போட்டோ
ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது எந்த அளவிற்கு ஃப்ரீயா இருப்பீங்கனு இவருடைய புது போட்டோவை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர் .ஆனாலும் பலர் ரொம்ப நாளைக்கு பிறகு தேவ மகளை பார்த்தாச்சு இது போதும் ஒரு வாரத்திற்கு இந்த போட்டோஸ் தாங்கும் என பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications