ஒரு சிரிப்பு.. ஒரு நெளிப்பு.. சுண்டி இழுக்குதே.. சும்மா இருங்க வாணி போஜன்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கலக்கலான போட்டாஸ்களால் மறுபடியும் தனது ரசிகர்களை சுண்டி இழுத்து வைரலாகியுள்ளார் வாணி போஜன்.
ஃபேஷன் மாடல் ஆக அறிமுகமாகி தெய்வமகள் சீரியல் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியவர் வாணி போஜன். சின்னத்திரையில் ஒரு புரட்சியே செய்து காட்டிவிட்டார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கதாநாயகியாக இவர் கலக்கி இருந்தார்.
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் அதில் மூழ்கிக் கிடப்பார்கள். ஆனால் இந்த சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்த இவரை பார்ப்பதற்காகவே பல இளைஞர்களும் இந்த சீரியலை பார்த்தார்கள். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் சத்யா கேரக்டரில் இடம்பிடித்துவிட்டார்.

தெய்வமகள் சீரியல்
2012 ஆம் ஆண்டில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் ஒரு மாடலாக நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஆஹா சீரியலிலும் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல்களில் அந்த அளவிற்கு இவருக்கு பெயர் வெளியே தெரியவில்லை. ஓரளவு ரசிகர்களை வைத்திருந்த இவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்தது போல சன் டிவியில் தெய்வமகள் இவருக்கு அமைந்தது.

லட்சுமி வந்தாச்சு சீரியல்
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பார். அதில் கிராமப்புற ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் நடித்திருந்தார். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இவருக்கு பெரிய வரவேற்பையும் விருதையும் வாங்கித் தந்தது தெய்வமகள் சீரியல் தான். ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது.

ஜட்ஜ் பதவி உயர்வு
தெய்வமகள் சீரியலைத் தொடர்ந்து இவர் அசத்தல் சுட்டீஸ், நகைச்சுவை ஜூனியர் என சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றினார். இதிலிருந்து கொண்டிருக்கும்போதே இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. அதற்கு முன்னாடி இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்தும் உள்ளார். ஹோம்லியான விளம்பரம் என்றாலே இவரை கூப்பிடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இவரிடம் ஹோம்லி லுக் உள்ளது.

ஹோம்லி அழகு
திரைப்படங்களிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் அளவுக்கு இவரது எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாக சொல்கிறார்கல். அழகாலும், வசீகரத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வாணி போஜனை, சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் அசோக் செல்வன் உடன் இவர் நடித்திருந்தார் .

சினிமாவில் ஹீரோயின்
அந்த படத்தில் அசோக் செல்வனின் பள்ளி தோழியாகவும் அவரது சிறுவயது கிரஸ் ஆகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் மீரா கேரக்டரில் நடித்ததால் பல ரசிகர்கள் இவரை இன்று வரையிலும் மீரா அக்கா என்றே கூப்பிடு வருகிறார்கள். சினிமாக்களிலும் சீரியல்களிலும் பிஸியாக இருந்த வாணி போஜன், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் பண்ண தவறுவதில்லை.

கலக்கல் போஸ்கள்
திரைப்படங்களில் இப்போ இவரை காணாத ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்களை பார்ப்பது பெரும் ஹேப்பியாக இருந்தது. லேட்டஸ்டாக படு சூடான போட்டோக்களைப் போட்டு ரசிகர்களின் ஏக்கத்துக்கு நல்ல தீனி போட்டுள்ளார் வாணி போஜன். புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் இது புது படத்திற்கான வாய்ப்புக்காக போடப்பட்டதா என்று கேட்டுள்ளனர்.
Recommended Video

மனசு குளிராச்சு
அதேசமயம், தீவிர ரசிகர்கள் பலர் இது எங்களது மனதை குளிர்விக்கத்தானே என்று கேட்டு வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் இவர் தற்போது கொடுத்திருக்கும் போஸ்கள் அதிலிருக்கும் இரண்டு கண் பார்வையும் பல ரசிகர்களை உருக தான் செய்கிறதாம். பலர் கவிதை மழை பொழிந்து வருகிறார்கள். எப்படியோ வாணிக்கும் பொழுது போனது போலாச்சு.. ரசிகர்களுக்கும் ரசிச்ச மாதிரியாச்சு.. சிங்கிள் கல்லில் டபுள் மாங்காய்தான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications