கருப்பு வெள்ளையில் .. கலக்கல் தேவதையாக.. வாணி போஜன்!
சென்னை: ரொம்ப நாளுக்கு பிறகு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தெய்வமகள் சத்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொஞ்சி குலாவி தாறுமாறாக கமெண்டுகளை போட்டு இன்ஸ்டாகிராம் கலங்க வைத்து வருகிறார்கள்.
வாணி போஜன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. வாணி போஜன் ஊட்டியில் பிறந்ததாலோ என்னவோ தளதளன்னு ஆப்பிள் போன்று நாளுக்கு நாள் பளபளப்பை கூட்டி வருகிறார்.
அதனால்தான் ரசிகர்கள் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று பட்டப் பெயர் கொடுத்து செல்லமாக அழைத்து வருகின்றனர்.

டிவி டூ சினிமா
இவர் சீரியல்களில் மூலமாக பெரும் ரசிகர்களை கவர்ந்தது போதாது என்று தற்போது திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார். அதுவுமில்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வருகிறார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் படை போல அதிகரித்து வருகிறார்கள்.

அழகான ஏர் ஹோஸ்டஸ்
இவர் ஆங்கில இலக்கியம் படித்து முடித்ததும் நடிகராக காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே ஒரு ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி இருக்கிறார். அதிலிருந்துதான் ஒரு மாடலாகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .மாடலாக இவர் முதலில் சென்னை சில்க்ஸின் விளம்பரத்தில் தோன்றிய பிறகு தமிழ் ரசிகர்களிடமும் நன்றாக அறிமுகமாகியிருக்கிறார்.

திகில் படம்
மாடலிங்கில் இருந்து முதலில் ஒரு திகில் படமான ஆர் ஏராவுவில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயா டிவியில் மாயா என்னும் ஒரு சீரியலிலும் நடித்திருக்கிறார். சீரியல்களில் இவர் காலடி எடுத்து வைத்த பிறகு தான் அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது .தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா கேரக்டரில் இவர் நடித்தார் என்று சொல்வதை விட இப்ப வரைக்கும் வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சீரியல் திருப்புமுனை
இவருக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது இந்த சீரியல்தான் .இந்த சீரியல் மூலமாக பல பெண்களின் முன்மாதிரியாக இவர் மாறிவிட்டார் போல்டான கேரக்டர் இவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் இந்த சீரியலில் ரசிகர்களும் இவரை சத்யா வாகவே மாற்றி விட்டனர் .நடுத்தர வர்க்கத்து பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு அந்தப் பெண்ணின் போராட்டங்களை இந்த சீரியல் சொல்லுவதால் அதில் நடித்த இவரது கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்று விட்டது.

ஜீ தமிழ் லட்சுமி வந்தாச்சு
அதுவும் துணிச்சலும் இவருக்கு மேலும் பல அமைய இவருடைய நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி கடைசி வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் கொண்டு வந்துவிட்டது. தெய்வமகளை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூன்று கேரக்டரில் ரசிகர்களை மிரள வைத்திருந்தார் .இந்த சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே இவர் சமூக வலைத்தளங்களையும் தன்வசப்படுத்தி அதிலும் ரசிகர்களை ஈர்க்க தொடங்கிவிட்டார் .

ஷோ ஜட்ஜ்
சீரியல் நடிகைகளுக்கும் கதாநாயகிகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கூடியது இவருக்குத்தான். நடிகையாக இருந்து அதன்பிறகு ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆகவும் மாறிவிட்டார் .அசத்தல் சுட்டிஸ் நிகழ்ச்சிக்கும் நகைச்சுவை ஜூனியர் கிங்ஸ் என்னும் நிகழ்ச்சிக்கும் இவர் ஜட்ஜாக பங்கேற்றிருக்கிறார். அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்த இவருக்கு ஓ மை கடவுளே என்னும் படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது .

மீராவாக இம்ப்ரஸ்
இந்த படத்தில் இவர் மீரா கேரக்டரில் படத்தின் நடிகரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிவிட்டார். பலபேர் வாழ்க்கையில் இருக்கும் கிரஸ் இவராகத்தான் இருந்து கொண்டிருக்கிறார் .இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை பலர் மீரா என்றும் பலர் சத்யா என்றும் அழைத்து வருகின்றனர். ஆனால் இவருடைய பெயர் வாணிபோஜன் என்பதையே பலர் மறந்துவிட்டனர்.

சூப்பர் பிசி
தற்போது என்ன தான் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய ரசிகர்களுக்காக போஸ்ட் போட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். மொட்டை மாடியில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் தேவதை போல ஜொலிக்க அவருடைய ரசிகர்கள் கண் இமைக்க மறந்து கவிதைகளை கொட்டி வருகிறார்கள் .அதுவும் பலர் உருகி உருகி சொந்தமாகவே இவருக்காக கவிதைகளை பதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications