மூக்கும் குத்தி...காதும் குத்தி...என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...!
சென்னை: சன் டிவியில் வாணிராணி சீரியல் ஆயிரமாவது எபிசோட் கொண்டாட்ட நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகியது. ராதிகா சரத்குமாரின் ஹிட் சீரியல் லிஸ்டில் வாணிராணி சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. ராதிகா வாணி, ராணி என்று அக்கா தங்கை என்று டூயல் கேரக்டரில் நடித்து இருந்தார்.
வாணி ராணி சீரியல் ஆயிரமாவது எபிசோட் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட ராதிகாவிடம், அவரது தங்கை நிரோஷா போனில் பேசினார். அப்போது சில சுவையான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.
அக்கா தனக்கு மூக்கு குத்திக்க என்னை துணைக்கு அழைச்சுட்டு போனாங்க.. கடைசியில் எனக்கு மூக்கு குத்தி விட்டுட்டாங்க.அக்கா பொண்ணு.. தனக்கு காது குத்திக்க என்னை துணைக்கு அழைச்சுட்டு போயி, எனக்கு காது குத்தி விட்டுச்சுன்னு சொன்னார்.

லண்டனில் இருந்து
தங்கை நிரோஷா லண்டனில் படிச்சுக்கிட்டு இருந்துச்சு. லண்டனில் இருந்து காலையில்தான் வந்து நல்லா தூங்கிட்டு இருந்துச்சு. மூக்கு குத்திக்கணும் துணைக்கு வரியான்னு கூப்பிட்டேன்...வரேன்க்கான்னு சொல்லி கூட வந்துச்சு. அங்கே பார்த்தால் வலிக்க வலிக்க மூக்கு குத்தி விட்டுகிட்டு இருந்தாங்க.

முதலில் உனக்கு
நிரோஷா முதலில் உனக்கு மூக்கு குத்திக்கலாம்.. அப்புறம் எனக்கு குத்திக்கலாம்னு அவளை உட்கார வச்சுட்டேன். அக்கா.. சும்மாதானே வந்தேன்னு சொல்லிகிட்டே இருந்துச்சு நிரோஷா. அப்பவே மூக்கை குத்திவிட்டுட்டாங்க. நான் அப்படியே எஸ்கேப் ஆயிட்டேன்னு சொன்னார் ராதிகா.

அம்மா மூக்கு பொண்ணு காது
போனில் இருந்த நிரோஷா.. அம்மா மூக்கு குத்திவிட்டாங்க... பொண்ணு காது குத்தி விட்டுச்சுன்னு சொன்னார். அப்போதும் சிரித்த ராதிகா...ரேயான் காது குத்திக்க வான்னு துணைக்கு அழைச்சுட்டு போச்சு. அப்போது சித்தி நீ முதலில் காது குத்திக்க.. அப்புறம் நான் குத்திக்கறேன்னு சொல்லி, நிரோஷாவுக்கு காது குத்தின உடனே அது குத்திக்காம கிளம்பி வந்துருச்சு என்று சிரித்தார்.

ரசிகர் அமிதாப்
நான் ஹிந்தியில் ஒரு படம் அமிதாப் சார் கூட நடிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ அமிதாப் சார் சொன்னார்.. நான் நிரோஷாவோட ஃபேன் என்று. அக்னி நட்சத்திரம் படத்தில் ஒரு பூங்காவனம் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிரோஷாவுக்காகவே பல முறை அந்த படத்தை பார்த்தேன்னு சொன்னார். எனக்கு ரொம்ப கடுப்பாயிருச்சுன்னு சிரிச்சுகிட்டே சொன்னார் ராதிகா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications