Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாணி ராணி நேகா.. பப்ளி பாப்பா இப்படி எப்படி வளர்ந்துருச்சு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாணி ராணி சீரியலைப் பார்த்தவர்கள் மறக்க முடியாது பேரு தேனு. ஆமாங்க அந்த குட்டிப் பாப்பாதான் இப்போது நெடுநெடுன்னு நல்லா வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆளாகி நிக்குது.

சீரியல் மூலம் வெளிச்சம் கிடைத்த பலரும் குட்டி சூப்பர் ஸ்டார்களாகியுள்ளனர். சினிமாவை விட டிவி சீரியல்களில்தான் லட்டு லட்டான நடிகைகளைப் பார்க்க முடியும். எங்கிருந்துதான் இவர்கள் கிடைப்பார்களோ. சினிமா நாயகிகளே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு இவர்களில் பலர் அவ்வளவு அழகாக இருப்பார்கள்.

அதேபோல பல குழந்தை நட்சத்திரங்களும் கூட டிவியிலிருந்துதான் பெரிய திரைக்குப் போயுள்ளனர். அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். அந்த வகையில் சின்னத் திரையில் குட்டிப் பாப்பாவாக அறிமுகமாகி இன்று பெரியஆளாகி நிற்கிறார் நேகா மேனன்.

 சென்னைக்காரப் பொண்ணு

சென்னைக்காரப் பொண்ணு

மேனன் என்று பெயரில் இருந்தாலும் கூட சென்னையில்தான் பிறந்தார். டிவி சீரியல்கள்தான் இவரது முகவரி. பைரவி, அகல்விளக்கு, பிரியமானவள் என இவர் பெரிய பெரிய சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ நம்ம ராதிகா மேடம் தயாரித்து உருவாக்கிய வாணி ராணி சீரியல்தான். வாயாடிப் பெண்ணாக வந்து அத்தனை பேரின் அன்பையும் வாரியிருப்பார்.

 எல்லோருக்கும் பிடித்த தேனு

எல்லோருக்கும் பிடித்த தேனு

தற்போது 20 வயதாகும் தேனு என்கிற நேகாவுக்கு நடிப்பு கை வந்த கலையானதற்கு வாணி ராணி தொடரும் முக்கியக் காரணம். இந்த சீரியலின் தொடக்கத்தில் சின்ன சிறுமியாக வந்தவர் சீரியல் முடியும்போது பெரிய பெண்ணாகி நின்றார். அத்தனை வருடம் இந்தத் தொடரில் நடித்ததால் நல்ல அனுபவம் இவருக்குக் கிடைத்தது.காரணம் இவருடைய திறமைக்கு தீனி போடும் வகையில் நிறைய காட்சிகள் வைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 வளர்ந்து ஆளாய்ருச்சு

வளர்ந்து ஆளாய்ருச்சு

நேகா இப்போது ஹீரோயினாக நடிக்கக் கூடிய அளவுக்கு பெரிய பெண்ணாகி விட்டார். கலர் கலராக போட்டோக்கள் போடுகிறார். அதை விட இவர் டிக்டாக்கில் வீடியோ போட்டு ஒரு நேரத்தில் கலக்கிக் கொண்டிருந்தார். அதில் உணர்ச்சிகரமாக இவர் எக்ஸ்பிரஷன் காட்டியதைப் பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். ரசிகர் கூட்டமும் பெருகியது. பிறகென்ன வழக்கம் போல எல்லோரும் செய்வது போலவும் இவரும் வீடியோக்களை வரிசையாக விட்டு வந்தார்.

 2 சினிமாவில் நடித்தார்

2 சினிமாவில் நடித்தார்

இந்த குட்டிப் பெண்ணுக்கு சினிமாவும் கை கொடுத்ததுங்க. அதாவது 2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் தலை காாட்டினார். நாக வெங்கடேஷ் என்பவர்தான் இதை இயக்கினார். அது மட்டுமல்லாமல் ஒரு விருது பெற்ற குறும்படத்திலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளாருங்க நம்ம நேகா குட்டி. இப்போது மீண்டும் சீரியலில் பிசியாகி விட்டார் இந்த குட்டி மல்லு சேச்சி.

 சித்தி 2 -பாக்கியலட்சுமி

சித்தி 2 -பாக்கியலட்சுமி

இப்ப நேகா மேடம் சித்தி 2 நாடகத்தில் நடித்து வருகிறார். அதேபோல விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரிலும் இருக்கிறார். இடையில் வந்த கொரோனாவால் ஷூட்டிங் எல்லாம் கேன்சலாகி விட்டதால் நேகாவின் வேலையும் இப்போது நின்று போய் விட்டது. இதனால் கவலையில் மூழ்கியுள்ளாராம் நேகா. ஆனாலும் விடாமல் தோழியருடன் பேசிக் கொண்டிருக்கிறாராம் பொழுது போவதற்கு.

 பாசம் ஜாஸ்தி

பாசம் ஜாஸ்தி

பெரிய திரையைப் பொறுத்தவரை பலரையும் நேகாவுக்குப் பிடிக்கும் என்றாலும் சிவகார்த்திகேயன் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வெற்றிக்காக உழைப்பது என பல அம்சங்கள் சிவாவிடம் இருக்காம். அதனால் பிடிக்குமாம். அதை விட முக்கியம், அவரும் டிவியிலிருந்து சினிமாவுக்குப் போனவர் என்பதால் கூடவே பாசம் ஜாஸ்தியாம்.. நல்ல விஷயம்தானங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+