Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க.. வனிதாக்கா பிக் பாஸுக்குப் போட்டியா கிளம்பிட்டாரா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் எதிர்ப்பும் இருந்த நிலையில் அதற்கு எதிராக களம் இறங்கியிருக்கும் வனிதா விஜயகுமாரின் புதிய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஆட்டத்தில் சூடு கிளப்பி இருக்கிறது.

வனிதாவின் ப்ரோமோ ரசிகர்களை கலாய்க்க வைத்திருக்கிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நிகழ்ச்சியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதை வைத்து பலரும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சாச்சு.

ஒரு பக்கம் ஆர்மிகள் கிளம்பி விட்டன.. கூடவே நக்கல் நையாண்டிகளும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் நடிகை வனிதாவும் தன் பங்குக்கு தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார் .

பாப்பா டூ பலே நடிகை

பாப்பா டூ பலே நடிகை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்து பல திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவருக்கு கிடைக்காத பேரும் புகழும் தற்போது வனிதாவிற்கு கிடைத்திருக்கிறது . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் இவரைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொண்டார்கள் .பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற இவர் அந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் பரபரப்பாக அந்த நிகழ்ச்சியைக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் அதகளம்

பிக் பாஸ் அதகளம்

ஒருவழியாக அவரை எலிமினேஷன் செய்து வீட்டை விட்டு வெளியேற்றிய பின்னர் சக போட்டியாளர்கள் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் யாரும் மறக்க முடியாத அளவிற்கு பண்ணிவிட்டு தான் வந்திருந்தார். ஆனால் தற்போது சீசன் 4 ஆரம்பித்ததும் இதற்கு முன்பு சீசனில் கலந்து கொண்டவர்கள் சிலர் தங்களுக்கு சம்பளம் தரவில்லை என்று ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும்போது தற்போது இவரின் பிரமோவும் ரசிகர்களிடையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டிரோல்கள் அதிகம்

டிரோல்கள் அதிகம்

இதுவரை நடந்தது போலவே இந்தச் சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். தற்போது நிகழ்ச்சி பரபரப்பாக ஆரம்பித்துள்ள. முதல் நாளே ஆட்டம் பாட்டத்துடன் உறுப்பினர்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் முதல் நாள் இந்த நிகழ்ச்சியை வைத்து டிரோல் பண்ணும் நெட்டிசன்கள் விதவிதமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். பல நெட்டிசன்கள் இந்த மாதிரி ட்ரோல் பண்ணிக் கொண்டிருக்கும்போது அதுவும் கூட இந்த நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரம்தான் அமைத்துக் கொண்டிருக்கிறது.

நானும் தட்டிக் கேட்பேன்

நானும் தட்டிக் கேட்பேன்

இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த ட்ரோல் போட்டோக்களை பார்த்ததும் என்ன தான் இருக்கு என்று நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த மாதிரிதான் இந்த பிக்பாஸ் 4 வீட்டிற்குள் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க நான் இருக்கிறேன் என்று களமிறங்கியிருக்கிறார் வனிதா. இதுவரைக்கும் கமலஹாசனுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்காத நிலையில் தற்போது இவரை காப்பியடித்து நானும் தப்புனா தட்டி கேட்பேன் நல்லது பண்ணுனா தட்டிக் கொடுப்பேன் என்று தோளில் தட்டியுள்ளார்.

வாங்க விவாதிக்கலாம்

வாங்க விவாதிக்கலாம்

அதுவும் உங்களோடு சேர்ந்து காரசாரமாக விவாதிக்க போகிறோம் என்னோடு நீங்களும் உங்களோடு நானும் என்று கூறியிருக்கிறார் . வனிதா தர்பாரில் சந்திப்போம் தினமும் என்று அடாவடியாக ஒரு ப்ரோமோ வை வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸ் விற்கு எதிராக வனிதா தர்பார் புரோமோ வைரலாக பரவி வருகிறது இதனைப் பற்றியும் பல நெட்டிசன்கள் இனி பிக் பாஸ் உடன் வனிதாவும் சேர்ந்து வேடிக்கை காட்ட போகிறார் என கலாய்த்து வருகிறார்கள்.

ஐ டோன்ட் கேர்

ஐ டோன்ட் கேர்

யார் என்ன சொன்னாலும் தன்னோட வேலையில் பிஸியா இருக்குற வனிதா தற்போது இனி இந்த மூன்று மாதமும் பெரும் பிசியாக இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்ல இந்த ப்ரோமோவை பார்த்து பல ரசிகர்களும் இவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள். டிஆர்பியை உயர்த்துவதற்காக பல டிவிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் போது வனிதாவால் விஜய் டிவி டிவிக்கு நல்லாவே டிஆர்பியை உயர்ந்தது.

சிக்குனா வறுவல்தான்

சிக்குனா வறுவல்தான்

அதனால்தான் அவரை பல நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரபலம் ஆக மாற உதவினார். சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை தொகுப்பாளர் லட்சுமி வறுத்தெடுத்து பின்பு அடுத்த லெவலுக்கு போனவரை தற்போது யூடியூப் சேனல்களராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறார் .இவரைப் பற்றி சேனலில் ஆரம்பத்திலேயே அக்கா என்று என்று வேற லெவல் ஆரம்பித்திருக்கிறார்கள். இது எந்த அளவில் போகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+