Bigg boss 7: மகளேனு அழைத்த கூல் சுரேஷ்.. சட்டென நோஸ் கட் செய்த வனிதா மகள் ஜோவிகா.. ஏன் என்னாச்சு!
சென்னை: மகளேனு அழைத்த கூல் சுரேஷை வனிதா மகள் ஜோவிகா நோஸ் கட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரு பிக்பாஸ் ஹவுஸ் இருக்கின்றன. இரு வீடு , ஒரு வாசல், ஒரு கிச்சன் என்ற அடிப்படையில் இந்த வீடு அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, மாயா கிருஷ்ணன், சரவணா, யுகேந்திரன் வாசுதேவன், விசித்திரா, அனன்யா ராவ், விஷ்ணு விஜய், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வயது கொண்டவர் ஜோவிகாதான். இவருக்கு 18 வயதாகிறது. இவர் வனிதா விஜயகுமாரின் மகள். ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்பதால் நடிப்பில் ஆர்வம் காட்டியுள்ளார். இதை அவரே முதல் நாள் பிக்பாஸில் கூறியிருந்தார்.

வனிதாவை போல் வனிதாவின் மகள் ஜோவிகாவும் யூடியூப்பில் பிரபலம்தான். இந்த பிக்பாஸ் வீட்டில் கிடைக்கும் புகழின் மூலம் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அந்த வகையில் பாபுலாரிட்டி டாஸ்க்கில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரமுடன் விவாதம் செய்து அதில் ஜோவிகா வெற்றியும் பெற்றார்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூல் சுரேஷ் வனிதா விஜயகுமாரின் பிறந்தநாளை கொண்டாட அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். இதற்காக ஜோவிகாவை அழைக்கும் போது மகளே என அழைத்தார். அதற்கு ஜோவிகா நான் மகள் அல்ல, கன்டெஸ்டென்ட் என ரிப்ளை கொடுத்து கூல் சுரேஷை நோஸ் கட் செய்தார்.
ஜோவிகாவின் இந்த பதிலை கேட்ட சிலர் திமிர் பேச்சு என விமர்சித்திருந்தாலும், பலர் அவர் கூறியதில் தவறில்லை. போட்டி என வந்துவிட்டால் சென்ட்டிமென்டில் சிக்கிக் கொள்ளக் கூடாது. தன் மகளேனு கூப்பிட்ட அவருக்கு நாளை விட்டுத் தர வேண்டியிருக்கும் என்பதால் ஜோவிகா அப்படி கூறியுள்ளார் என பலர் ஆதரித்து கமென்ட் செய்துள்ளனர். சென்ட்டிமென்ட்டுக்கு மயங்காமல் சக போட்டியாளரை போட்டியாளராக மட்டும் பார்க்க வேண்டும் என்பதுதான் சிறந்த வழி என்கிறார்கள்.
வனிதாவின் தாய் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். அவர் இருந்த போது ஒவ்வொரு நாளும் அனல் பறக்கும். அந்த சீசன் ஹிட்டானதற்கு முக்கிய காரணமே வனிதாதான் என்கிறார்கள். இரு முறை வனிதா உள்ளே போயும் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications