நாட்டாமையை தூக்கி நச்சுன்னு இடுப்பில் வைத்துக் கொண்ட வனிதா விஜயகுமார் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:விஜய் டிவியின் கலக்க போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நாட்டாமை வேடமிட்டு வந்த போட்டியாளரை தூக்கி வைத்துக்கொண்டார் வனிதா விஜயகுமார்.

கலக்க போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் பங்கேற்று இருக்கிறார். இவருடன் ரம்யா பாண்டியன், ஈரோடு மகேஷ், மதுரை முத்து, ஆதவன் உள்ளிட்டவர்களும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர்.

இதில் நடுவர்கள் இப்போதைக்கு மதிப்பெண்கள் என்று எதுவும் வழங்குவதில்லை. மக்களோடு ரசித்து பார்த்து சிரித்து மகிழ்கிறார்கள். இதுவரை நிகழ்ச்சியில் நடுவர்களின் பங்கு இது மட்டுமாகத்தான் இருக்கிறது.

 மதுரை முத்து ஆதவன்

மதுரை முத்து ஆதவன்

சன் டிவியில் இருந்து ஆதவன், மதுரை முத்து இருவரும் விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சென்று இருந்தாலும், மதுரை முத்து, ஆதவன், ஈரோடு மகேஷ் மூவரும் வாரத்துக்கு ஒருவர் என்று ஸ்பெஷலாக ஸ்டேண்டப் காமெடி சொல்லி வருகிறார்கள். இது நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம்.

 கல்பாக்கம் பெண்

கல்பாக்கம் பெண்

கல்பாக்கத்தில் இருந்து கலந்துக்கொண்டு இருக்கும் ஒரு பெண் போட்டியாளர் ரொம்ப அருமையாக பாடி லாங்குவேஜுடன் காமெடி செய்கிறார். அறந்தாங்கி நிஷா போன்று சீசன் 9 க்கு சிறந்த போட்டியாளராக தேர்வாகும் அளவுக்கு நகைச்சுவை செய்து பெருவாரியான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.

 நாட்டாமை கல்பாக்கம் பெண்

நாட்டாமை கல்பாக்கம் பெண்

நாட்டாமை கெட்டப்பில் வந்த போட்டியாளருடன் கல்பாக்கம் பெண்ணும் சேர்த்துக்கொள்ள நிகழ்ச்சி களைக்கட்டி இருக்கிறது. நாளை மதியம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ இப்போது ஒளிபரப்பாகி பார்க்கும் ஆவலைத் தூண்டி உள்ளது. நாட்டாமை கெட்டப் போட்டியாளர் குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை கான்செப்ட்டாக வைத்து நகைச்சுவை செய்துள்ளார்.

 என்றா கண்ணு நல்லாருக்கியா

என்றா கண்ணு நல்லாருக்கியா

நாட்டாமை கெட்டப்பில் வனிதா விஜயகுமாரை பார்த்து என்றா கண்ணு நல்லாருக்கியா.. சாப்பிட்டியா கண்ணு என்று கேட்க.. மகிழ்ச்சி அடைந்த வனிதா, நேராக மேடைக்கு சென்று போட்டியாளரை தூக்கி வைத்துக்கொண்டார். போட்டியாளர் திரு திரு என்று விழிப்பதை ஈரோடு மகேஷ் இதுதான் மரண பீதி என்று வேடிக்கையாக கலாய்க்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+