பாக்கியலட்சுமியிலிருந்து வெளியேறும் ரேஷ்மா?.. இனி கோபியை ஆட்டி படைக்கும் "ராதிகா" வேடத்தில் வனிதா?
பாக்கியலட்சுமி சீரியலில் இனி ராதிகா கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா வெளியேற போவதாகவும் அவருக்கு பதில் இனி அந்த கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல் ஆகும். திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதால் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது இந்த சீரியல்.
கட்டிக்கிட்ட வாழ்க்கையிலும் ஒட்டிக் கிட்ட வாழ்க்கையிலும் பிரச்சினையோ பிரச்சினை... அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்பார்கள். அது இந்த சீரியலுக்கு பக்காவாக பொருந்தும். ஆனால் அரசனுக்கும் புருஷனுக்கும் பதிலாக அரசியை, பொண்டாட்டியை என மாற்றிக் கொண்டால் ஏக பொருத்தம்.

விறுவிறுப்பு
இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கொடுத்து வருகிறது. இதனால் இந்த சீரியல் பெரும்பாலான இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுல்லேட்டி. இவர் நடிகர் பாபி சின்ஹாவின் சகோதரி. ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சீரியல் வாய்ப்புகள்
அதன்பிறகு அவருக்கு சீரியல் வாய்ப்புகளும் ரியாலிட்டி ஷோக்களின் வாய்ப்புகளும் வந்தன. இந்த ராதிகா கேரக்டரில் முதலில் நடிகை ஜெனிஃபர்தான் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியலில் தனது ரோல் நெகட்டிவ்வாக செல்கிறது என்பதால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது.

ராதிகா வேடத்தில் ரேஷ்மா
இதனால் ஜெனிஃபருக்கு பதிலாக ராதிகா வேடத்தில் ரேஷ்மா நடிக்கத் தொடங்கினார். கோபியையும் பாக்யா குடும்பத்தையும் ஆட்டி படைக்கும் வில்லியாக ரேஷ்மா நடித்து வருகிறார். அவரை தினந்தோறும் திட்டாத மக்களே இருக்கமாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு வில்லத்தனத்தை செய்து வருகிறார். இந்த நிலையில் இதை விட வேறு ஒரு சேனலில் ரேஷ்மாவுக்கு வெயிட்டான வில்லி கேரக்டர் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கியலட்சுமி சீரியல்
இதனால் ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகுவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றம் வர போவதாகவும் தகவல்கள் வந்தன. அதன்படி ரேஷ்மா நடித்து வந்த ராதிகா கேரக்டரில் இனி அவருக்கு பதில் நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ், கலக்க போவது யாரு, பிபி ஜோடிகள், குக் வித் கோமாளி உள்ளிட்ட ரிலாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். இதனால் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் வனிதா யாரையும் வைத்து பார்க்காமல் தைரியமாக சொல்வார் என்பதால் அவரை அனைவருக்கும் பிடிக்கும். தற்போது ராதிகா கேரக்டரில் வந்து வனிதா மிரட்டுவார் என்ற தகவலால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மறுத்த தயாரிப்பு நிறுவனம்
இந்த நிலையில் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில் ரேஷ்மாவுக்கு பதில் ராதிகா கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்ற விஷயத்தில் துளி கட உண்மை இல்லை. ரேஷ்மாவே தொடர்ந்து ராதிகாவாக நடித்து வருகிறார் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் வனிதா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications