சுத்த தங்கம் இளையராஜா.. கீழிறங்கி சென்று மட்டமாய் சொன்ன வனிதா.. கொளுத்தி போடும் பப்ளிசிட்டி: பிரபலம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து, இயக்கி நடித்த படம் 'மிசஸ் அண்ட் மிஸ்டர்', ராபர்ட், ஷகிலா, பாத்திமா பாபு, ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் வெளியானதிலிருந்தே சர்ச்சையை கிளப்பிவிட்டது.. குறிப்பாக, இந்தப் படத்தில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இளையராஜா இசையமைத்த 'சிவராத்திரி...' பாடல் இடம் பெற்றிருந்தது. இதன் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், வனிதா குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
தான் இசையமைத்த "சிவராத்திரி" பாடலை தன்னுடைய அனுமதியின்றி படத்தில் வனிதா பயன்படுத்தியிருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினமும் விசாரணைக்கு வந்தது.

இளையராஜா பெயரை நீக்கிய வனிதா
அப்போது, வனிதா விஜயகுமார் கோர்ட்டில் நேரில் ஆஜராகியிருந்தார்.. இளையராஜாவின் 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களிடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தியிருப்பாகவும், படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அதை நீக்கிவிட்டோம்'' என்றும் வனிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.. அத்துடன், விசாரணையை ஆகஸ்டு 18ம் தேதிக்கும் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "வனிதாவையும், சர்ச்சையையும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாது.. தான் எடுத்துள்ள இந்த படத்துக்கு புரமோஷன் ஆகணும்.. இதற்காக எந்த நிலைமைக்கும் இறங்க தயாராகிவிட்டார் வனிதா.
இளையராஜா வீட்டு மருமகள்
ஒருகாலத்தில் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போவதற்கு வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கிறது.. இதற்கு வனிதாவே அன்று விருப்பட்டிருக்கலாம் அல்லது மஞ்சுளா விஜயகுமார் அப்படி முடிவு செய்திருக்கலாம்.. ஆனால், இப்போது இந்த செய்தியை வனிதா திரித்து கூறுகிறார்.. அதிலும், இளையராவையே கல்யாணம் செய்வதாக இருந்தேன் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்காது.
ஏனென்றால், இளையராஜா தன்னுடைய மனைவியை, வனிதா பிறப்பதற்கு முன்பேயே திருமணம் செய்தவர்.. எனவே தன்னுடைய பட,த்துக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக வனிதா இப்படியெல்லாம் பேசிவருகிறார்.
விஷால் - ரஜினி - கமல்
விஷால் தன்னுடைய பட நிகழ்ச்சிக்கு .வந்தபோது, மைக்கை பிடித்ததுமே கை உதறல் எடுத்தது.. அப்படி செயற்கையாகவே, வேண்டுமென்றே கையை அப்படி உதறினார் விஷால்.. விஷாலுக்கு உடம்பு சரியில்லை என்று அப்போது சொன்னதே விளம்பரத்துக்காகத்தான்.. சினிமாவில் எதுவுமே உண்மை கிடையாது. எல்லாமே இங்கு செயற்கைதான்.
ஒவ்வொருமுறை தன்னுடைய படத்தின் ரிலீஸின்போது ரஜினிகாந்த், பரபரப்பு கருத்துக்களை சொல்வார்.. தக் லைஃப் படத்துக்கும் கமல், கன்னடர்கள் பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு பேசினார்.. இதெல்லாம் தங்களின் படத்துக்கான விளம்பரங்களாகும்.. இதனால், 50 கோடி லாபம் எளிதாக கிடைத்துவிடும்..
கொளுத்தி போட்டுவிடுவார்
இப்போது வனிதா சொல்வதும் அப்படித்தான்.. அதில், உண்மை ஒரு சதவீதம்கூட கிடையாது.. கோலிவுட்டில் தன்னுடைய படம் ரீச் ஆனால், புதிய தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள், கோடியில் சம்பாதிக்கலாம் என்பதுதான் இதுபோன்றவர்களின் சிந்தனையாக உள்ளது.. இதற்காக மலிவான கற்பனைகளை சொல்கிறார்கள்.
பெரிய விளம்பரத்துக்காக எதையும் கொளுத்திப்போட தயங்க மாட்டார் வனிதா.. அந்தவகையில், இளையராஜா மீது சுமத்தப்பட்ட அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
சுத்த தங்கம் இளையராஜா
சமீபத்தில் இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் தந்திருந்த ஒரு பேட்டியில், வனிதா இப்படி சொல்லியதிலிருந்து பலரும் இளையராஜாவை தவறாக பேசி வருகிறார்கள். இளையராஜா இந்த விஷயத்தில் சுத்த தங்கம்.. இசையைத் தவிர மற்ற எதையும் வெறுக்கக்கூடியவர்
வனிதா உண்மையிலேயே இளையராஜாவிடம் பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமதி கேட்டு இருந்தால், இளையராஜா ஏன் வழக்கு தொடரப்போகிறார்? இது எல்லாமே தன்னுடைய படத்தின் பப்ளிசிட்டிக்காக வனிதா செய்த வேலை.. வனிதாவிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள்..
இது பற்றி யாராவது இளையராஜாவிடம் சென்று பேட்டி எடுத்து விட முடியுமா? யாருக்கும் அதற்கெல்லாம் தைரியம் கிடையாது.. ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதை அவர் தானே சொல்ல வேண்டும்? என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications