குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் 3 ஹவுஸ் மேட்ஸ் வனிதா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில், லாஸ்லியாவுக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு கார கறியை செய்து அசத்தினார்.
வனிதா விஜயகுமார் லாஸ்லியா பிக் பாஸ் ஹவுஸ்மேட்டாக இருக்கும்போது தன்னிடம் எவ்வளவுதான் சண்டை போட்டாலும், சாண்டி அண்ட் கோவுடன் சேர்ந்து தன்னை கிண்டல் செய்து இருந்தாலும் லாஸ்லியா தனது தங்கை ப்ரீத்தா மாதிரி என்று பாசம் காண்பிப்பார்.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா லாஸ்லியாவுக்கு பிடித்த உருளைக் கிழங்கு கார கரறி செய்து, இதை நான் செய்தால் லாஸ்லியா விரும்பி சாப்பிடுவார் என்றும் சொன்னார்.

குக்கு வித் கோமாளி
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியின் நடுவர்களாக செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பங்கு வகித்து வருகின்றனர். வனிதா விஜயகுமார், தாடி பாலாஜி, நடிகை ரேகா. நடிகை ரம்யா பாண்டியன், பேராசிரியர் கு, ஞானசம்பந்தம், உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களை டிஸ்டர்ப் செய்ய கோமாளிகள் என்று விஜய் டிவியின் காமெடி, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருக்கின்றனர்.

உருளைக் கிழங்கு ரெசிபி
கடந்த ஞாயிற்று கிழமை டாஸ்க்கில் உருளைக் கிழங்கு ரெசிபி டாஸ்க் வச்சாங்க. அதில் கோமாளியாக இருந்த மணிமேகலைக்கு கத்தியை எப்படி வைத்து காயை வெட்டுவது என்று கூட தெரியலைங்க. அப்புறமா கத்தியை திருப்பி வச்சு இருக்கேன்னு உமா சொல்லி, வெட்டும் புறத்தை வச்சு உருளைக் கிழங்கை வெட்டினார். வெங்காயம் வெட்டினா கண்ணீர் வரும்னு கூட தெரியாத அப்பிராணியாக இருக்கிறாரே மணிமேகலை.

உருளையில் பாயாசம்
உருளைளைக் கிழங்கில் பாயசம் செய்து அசத்தினார் பிக்பாஸ் 3 புகழ் மோகன் வைத்யா. ரோபோ சங்கர் மனைவி ஆலு பராத்தா செய்தார். ஓரளவுக்கு நன்றாகவே வந்திருந்தது. தாடி பாலாஜி செய்த கட்லெட் பிசுக்கென்று இருந்ததாக ஜட்ஜஸ் சொன்னார்கள்.

ஹைலைட் இது
நிகழ்ச்சியின் ஹைலைட் என்று சொன்னால் போட்டியாளர்களின் கையில் விலங்கு. ஆனால், இவர்கள் சொல்படி கேட்டு கோமாளிகள் சமையல் செய்ய வேண்டும். இதில் ரொம்ப ஒன்றுமே தெரியாமல் இருந்தது நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலைதான். இதுவரை அடுப்படி பக்கமே போனதில்லை போலும்...ரொம்ப கஷ்டம்...! .
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications