தந்தை பாசத்திற்காக ஏங்கும் வனிதா விஜயகுமார்.. பேமிலி போட்டோவில் இடம் பெற போவது எப்போது? கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா விஜயகுமார் தன்னுடன் பேசாததை எண்ணி வீடியோ ஒன்றில் வனிதா விஜயகுமார் அழுவது மனதை உருக்குகிறது.

வனிதா மிகவும் தைரியமானவர். தன்னந்தனியாக இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வருகிறார். பிக்பாஸ் கொடுத்த ரீ என்ட்ரியால் ஓரளவுக்கு இன்டஸ்ட்ரியில் பிஸியாக இருந்து வருகிறார்.

வாயாடி, வத்திக்குச்சி, வாய திறந்தாலே அசிங்கமான பேச்சுதான், அதிரடி வனிதா என பல பெயர்கள் இருந்தாலும் தன்னந்தனியாக இரு குழந்தைகளை வளர்த்தெடுத்து வருவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பது அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த ரணத்தின் வலி தெரியும்.

வனிதாவுக்கும் தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை

வனிதாவுக்கும் தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை

வனிதாவுக்கும் அவரது தந்தை குடும்பத்திற்கும் இடையே இருந்து வந்த பிரச்சினையை இந்த ஊரே அறியும். அதிலிருந்து வனிதாவுடன் விஜயகுமாரோ, அவரது சகோதரர் அருண் விஜய், சகோதரிகள் என யாரும் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை. மஞ்சுளா இருந்த வரை அவரும் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை.

வனிதா பேட்டி

வனிதா பேட்டி

இதுகுறித்து வனிதா அளித்த பேட்டியில், குடும்ப சண்டையை மேலும் பெரிதாக்க விரும்பாமல் எனது தவறை எண்ணி எனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி அதை ஈமெயில் மூலம் அனுப்பியிருந்தேன். ஆனால் அந்த கடிதத்திற்கு எனக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றார். இன்று வரை தனது பெயருக்கு பின்னால் விஜயகுமார் என்ற தனது தந்தையின் பெயரைதான் வைத்துள்ளார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்க போவது யார், பிக் பாஸ் ஜோடி, பிக் பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், நடிகர் பிரசாந்த் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் பிரசாந்த் தந்தை தியாகராஜனுடன் தமிழ் தொலைகாட்சி சேனலில் வனிதா பேட்டியில் கலந்து கொண்டார்.

வனிதாவின் தந்தை

வனிதாவின் தந்தை

அப்போது வனிதாவின் தந்தை குறித்து தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வனிதாவோ நான் அப்பாவுடன் இணைய பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறேன். ஆனால் சிலர் என்னை அவருடன் இணைய தடுக்கிறார்கள். ரஜினி அங்கிளிடம் எனது தந்தையுடன் என்னை சேர்த்து வைக்குமாறு கூறியிருந்தேன்.

பயன் இல்லை

பயன் இல்லை

ஆனால் அது பயனளிக்காமல் போயிற்று. அதிலிருந்து ரஜினி அங்கிள் அப்பாவுடன் அவ்வளவாக பேசுவதே இல்லை என கண்ணீர் மல்க கூறியிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு கூட விஜயகுமார், அருண் விஜய், அவரது சகோதரிகளுடன் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டதை தனது ட்விட்டரில் போட்ட வனிதா, நீங்கள் என்னை வேண்டுமானால் அடித்துவிடுங்கள். ஆனால் என்னுடன் பேசாமல் இருக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

அருண் விஜய்க்கு கோரிக்கை

அருண் விஜய்க்கு கோரிக்கை

வேற்றுமைகளை அருண் விஜய் களைய வேண்டும். இதுதான் அவர் அவருடைய ரசிகர்களுக்கு சொல்லும் கருத்து. ரசிகர்களுக்கு எப்போதும் தவறான முன்னுதாரணமாக இருக்க வேண்டும். போனது போகட்டும், யார் வீட்டில்தான் பிரச்சினை இல்லை என கேள்வி எழுப்பி அருண் விஜய்யை டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் தனது குடும்பத்தை பற்றி இவர் கூறும் விமர்சனங்களுக்கு யாராவது ஆதரவு அளிக்கிறேன் என்ற பெயரில் விஜயகுமார் உள்ளிட்டோரை விமர்சனம் செய்தால் வனிதா விடவே மாட்டார். "அவர் எனது அப்பா, எனக்கு முழு உரிமை உள்ளது. அவரை பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை" என்பார். இது போல் நிறைய நெட்டிசன்கள் வனிதாவிடம் வாங்கிக் கட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+