Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமத்து... மகளே அம்மா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு.. அடுத்து என்ன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுமணம் செஞ்சுக்க போறது யாருன்னு தெரியலையா. நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தாங்க. இவங்க கல்யாணத்துக்கு அவங்களோட மகளே சம்மதமும் வாழ்த்தும் சொல்லியாச்சு.. அடுத்து டும் டும்தான்.

Recommended Video

    Vanitha Vijaykumar -க்கு மூன்றாவது திருமணம் | Peter Paul

    வனிதா சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடிச்சிருக்காங்க. இப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரொம்ப பிரபலமாகி விட்டார். இவங்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது அவர் மூன்றாவது திருமணம் செய்து கொள்வதாக செய்தி வெளியாகி இருக்கு.

    வனிதா நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளாவார். வனிதா ஏற்கனவே நடிகர் ஆகாஷ், ஆந்திராவை சேர்ந்த ராஜன் ஆனந்தையும் திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். குடும்ப பிரச்சனைகளால் அடிக்கடி நியூஸ் சேனல்களில் வந்து பிரபலமானவர்.

    3வது கணவர் பீட்டர் பால்

    3வது கணவர் பீட்டர் பால்

    தற்போது பீட்டர் பால் என்பவரை வருகிற 27-ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து செய்யப் போறாங்க. இதுபற்றி அவர் சொல்லும் போது அரசு விதிமுறைப்படி எங்கள் திருமணம் நடக்கும். நான் ஏற்கனவே நடந்த திருமணத்திற்கு விவாகரத்து பெற்றுள்ளேன். இப்போது பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்யப்போகிறேன். அவர் ஒரு நண்பராக வந்து என்னுடைய வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையே தந்தார்.

    40 வயசுதானே ஆகுது

    40 வயசுதானே ஆகுது

    என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும். எனக்கு இப்ப 40 வயசு தான் ஆகிறது . ஒரு பொண்ணுக்கும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை அவசியம். ஆயிரம் சொந்தங்கள் கூட இருந்தாலும் நம்ம கூட கடைசி வரைக்கும் வரப்போகிறது நம்மளோட துணை மட்டும்தான். அவங்களும் நம்ம மனசுக்கு புடிச்ச மாதிரி நம்மள நல்லா பார்க்கிறவங்க, நம்ம மேல முழு பாசத்தோட இருந்தாலே போதும். எவ்வளவு கஷ்டத்துல நம்ம ஜெயித்துவிடலாம் .ஆனால் என் வாழ்க்கையில இந்த பாதுகாப்பு இப்பதான் கிடைச்சிருக்கு.

    மகள் சம்மதம்

    மகள் சம்மதம்

    அவருடைய கனவு இப்பதான் நனவாகிக் இருக்கிறதா அவர் கூட இருக்கும்போது அவங்க பாதுகாப்பாக உணர்கிறார்களாம் .இப்போ இவங்களோட திருமணத்திற்கு அவங்க குழந்தைகளும் சம்மதம் சொல்லி இருக்காங்க. அவங்க குழந்தைகள் இவங்களோட திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் வனிதாவின் கண்களில் நீர் வந்துச்சாம். இது அவர்களுடைய வாழ்க்கையில் சிறந்த தருணம்.

    உதவி இல்லை

    உதவி இல்லை

    அவருடைய குடும்பத்தில் இருந்து எந்தவிதமான ஆதரவு, உதவி இவங்களுக்கு கிடைக்கவில்லையாம். இவங்களோட மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளுடைய நலனுக்காகவும் தான் இவங்க முடிவு பண்ணி இருக்காங்களாம். வனிதாவின் திருமணத்திற்கு அவருடைய மகள் ஜோவிகா வாழ்த்து கூறி இணையதள பக்கத்தில் போஸ்ட் போட்டு இருக்காங்க. அதில் உங்களுடைய சந்தோஷம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் அம்மா.

    முழு வாழ்க்கை வாழ வேண்டும்

    முழு வாழ்க்கை வாழ வேண்டும்

    உங்களைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் பாசம் புரியும் .உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் முழுமையாக வாழ வேண்டும. நான் 15 வருடங்களாக உங்களுடைய பாதுகாப்பில் இருக்கிறேன். நான் உங்களுக்கு மகள் மட்டுமல்ல ஒரு பிரண்ட். ஆதலால் உங்களுடைய வலியும், வேதனைகளும் எனக்கு புரியும். அதனால் நீங்கள் திருமணம் செய்வதற்கு எங்களுக்கு சந்தோஷம்தான். உங்கள் மகிழ்ச்சி மட்டும் எங்களுக்கு போதும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

    சந்தோஷ வாழ்க்கை

    இப்ப வரைக்கும் வனிதாவிற்கு அவங்க குடும்பத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கலையாம். குடும்பங்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துகிட்டு தான் இருக்காம். அதனால அவங்க பீட்டர் பாலை திருமணம் செய்யப் போகிறார் . அவர் ரொம்ப நேர்மையானவர், அன்பானவர் என்று சொல்லி இருக்கிறார் வனிதா. அவருடைய படைப்பு விரைவில் திரையில் வரும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

    நல்லாருங்க சந்தோஷமா இருங்க

    நல்லாருங்க சந்தோஷமா இருங்க

    வனிதாவுடன் தற்போது இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர். மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது அப்பாவுடன் உள்ளான். அவருடைய குழந்தைகள் நலனுக்காகவும் திருமணம் செய்வதாக திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அவரது திருமண போட்டோக்களை அவரே இணையதளத்தில் பதிவிடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார் வனிதா.. நல்லாருங்க நல்லாருங்க.. சந்தோஷமா இருங்க.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+