வனிதாக்கா...சாப்பிடவேண்டியதுதான்....அதுக்காக 90 பானி பூரியா?
சென்னை: அட..ஒரு போட்டிக்கு சாப்பிட வேண்டியதுதான்... அதுக்காக வனிதாவும் பாலாவும் சேர்ந்து 50..60 ..90ன்னு பானி பூரிகளை சாப்பிட்டு இருக்காங்கன்னா பாருங்களேன்...!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி.பிப்ரவரி மாதம்தான் ஃபைனல் முடிந்தது. மூன்று மாதங்கள் பிளான் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்து இருந்தது விஜய் டிவி,.
குக்கரி ஷோ என்றாலும், இதில் நகைச்சுவை இருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட் குக்குகளுக்கு கோமாளிகள் சுத்தமாக சமையல் தெரியாதவர்கள்.. இவர்களை வைத்துக்கொண்டு சமையல் செய்து அசத்தி திறமையை நிரூபிப்பவர்கள் சூப்பர் குக்குகள்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் குக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது நன்றாக இருந்தது. பூரி, உருளைக்கிழங்கு என்று தனக்கு தெரிந்த டிஷ் செய்து அசத்தினார். இவரும் கோமாளியிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகள் நகைச்சுவையாகத்தான் இருந்தது.

வனிதா விஜயகுமார்
போட்டி என்று வந்துவிட்டால் அதுவும் சமையலில் போட்டி என்றால் வனிதா வேற லெவல் வனிதாவாகிருவாங்க. ஒவ்வொரு ஷோ ஆரம்பத்தின் போதும் அட்வான்ஸ் டாஸ்க் என்று ஒரு செக்மென்ட் இருக்கும். இதில்தான் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோன்னு கேட்கற அளவுக்கு டாஸ்க் இருக்கும்.

பானி பூரி சாப்பிட
பானை நிறைய தண்ணீர் வைத்துவிட்டு, கூடை நிறைய பானி பூரிகளை குவித்து வைத்தார்கள். இதில் மசித்த உருளைக்கிழங்கு வேற..ஆரம்பத்தில் குக்குகள் பானி பூரியை கொடுக்க கொடுக்க கோமாளிகள் சாப்பிட வேண்டும். அடுத்து கோமாளிகள் கொடுக்க கொடுக்க குக்குகள் சாப்பிட வேண்டும். இதில் 90 பூரிகள் சாப்பிட்டு அட்வான்ஸ் டாஸ்க்கில் வென்றவர் வனிதா அண்ட் கோமாளிதான்.

சூப்பர் ஹிட் ஷோ
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோ என்று சொல்லலாம். வேற எந்த நிகழ்ச்சியும் குறுகிய காலத்தில் இத்தனை வெற்றி பெற்றதில்லை. ஜாலியான பொழுது போக்கு நிகழ்ச்சியாக அனைத்து தரப்பு மக்களால் ரசித்துப் பார்க்கப்பட்டது. கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் இந்த ஷோவை மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications