ஐசியூவில் என் மகன்.. நான் சொன்ன வார்த்தை, என் கையை புடிச்சுகிட்டான்! கண்கலங்கிய நடிகை வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார். வனிதா விஜயகுமாருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் அவருடைய தந்தையுடன் வசித்து வரும் நிலையில் இப்போது வனிதாவுடன் பேசாமல் தான் இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய மகனுடைய நினைவுகள் குறித்து வனிதா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சினிமாவில் ஒரு சிலரையும் சர்ச்சைகளையும் பிரித்து பார்க்க முடியாது அதில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் செய்யும் செயல்கள் எல்லாமே அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும். அதிலும் திருமண சர்ச்சைகள் வனிதாவை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வனிதாவிற்கு 19 வயதிலேயே அவருடைய குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அப்போது அவருக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் பிறந்தார்.

மூன்று குழந்தைகள்
மகன் பிறந்த சில வருடங்களில் முதல் கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். பிறகு சில வருடங்களில் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் ஒரு மகள் பிறந்தார். பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். அடுத்ததாக ஒரு திருமணம் செய்த போது அவருக்கு ஒரு மகள் பிறந்து இருக்கிறார். வனிதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
மகள்களுடன் பேட்டி
இதில் இரண்டு மகள்களும் வனிதாவுடன் வாழ்ந்து வந்தனர். மூத்த மகன் ஸ்ரீஹரி அவருடைய அப்பா ஆகாஷ் உடன் வசித்து வருகிறார். அதுபோல வனிதாவின் இரண்டு மகள்களில் ஜோவிகா மட்டும்தான் அவரோடு வசித்து வருகிறார். இரண்டாவது மகள் அவருடைய தந்தையுடன் வசித்து வருகிறார் அவ்வப்போது வனிதாவுடன் வசிக்கிறார். தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஐசியூவில் குழந்தை
அப்போது தன்னுடைய மூத்த மகன் ஸ்ரீஹரி குறித்து கண்கலங்க பேசியிருந்தார். அதில் அவர் பேசுகையில், எனக்கு 19 வயதிலேயே ஸ்ரீஹரி பிறந்துவிட்டான். அவனை கையில் வாங்கிய தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அவன் வயிற்றில் இருக்கும் போது குழந்தைக்கு கொடி சுற்றி விட்டது என்று ஆபரேஷன் செய்துதான் அவனை எடுத்தார்கள். நான் கண்விழித்து பார்த்தபோது உங்கள் மகன் ஐசியூவில் இருக்கிறான் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
மகன் காட்டிய அன்பு
பிறகு கொஞ்ச நேரம் கழிச்சு அவனுக்கு பால் கொடுப்பதற்காக என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். அப்போது அவனை என் கையில் தூக்கியது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு என்னுடைய அக்கா பிள்ளைகளை தூக்கி வளர்த்திருக்கிறேன் ஆனால் என்னுடைய பிள்ளையை முதல்முறையாக தூக்கும் போது இருந்த உணர்வுக்கு எக்ஸ்ப்ளனேஷன் செய்ய முடியாது. அப்போது என் மீது உனக்கு உண்மையான பாசம் இருந்தால் என் கைவிரல்களை பிடித்துக் கொள் என்று என் மனதிற்குள் இருந்தேன்.
தாய்மை
அந்த நேரத்தில் குழந்தையை கொடுத்தபோது அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை என் கை விரலை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அப்போது நான் என்ன நினைக்கிறேன் என்று என்னுடைய மகன் புரிந்து கொள்கிறான் என்று எனக்குள் தோன்றியது. என்னுடைய மூன்று குழந்தைகளையும் நான் கையில் வாங்கிய தருணத்தை மறக்க முடியாது. அது அவ்வளவு அழகாக இருந்தது. ஆனாலும் என்னுடைய மகன் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் என்று வனிதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications