நாங்க முதியோர்னா டூரிஸ்ட் ஃபேமிலில நடிச்சவங்க யாரு? சிம்ரனை சீண்டி வனிதா கேட்ட கேள்வி.. மகள் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா கதை எழுதி இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் வனிதா பேசியிருந்தார். அப்போது தன்னை பற்றி விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருந்தார். தான் இப்போது கதாநாயகியாக நடிப்பதை குறித்து சிலர் முதியோர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று கலாய்க்கிறீர்களே அப்படி என்றால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிச்சவங்க யாரு ? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுபோல வனிதாவின் கேள்விகளுக்கு அவருடைய மகள் ஜோவிகாவே பதிலும் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நடிகர் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருந்தார். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டு குடும்பத்தோடு வாழ்ந்து வந்த வனிதாக்கு அடுத்தடுத்து பிரச்சனைகளை வந்தது. அதனால் அவர் காதலிக்க திருமணம் செய்தவர்களை விவாகரத்து செய்துவிட்டு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் இவருக்கு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

Vanitha Vijayakumar Jovika

வனிதா ஆதங்கம்

பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மகள் தயாரிப்பில் தான் கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக அவருடைய முன்னாள் காதலரும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோ வெளியானதும் சில விமர்சனங்களும் வந்தது. அது குறித்து சமீபத்தில் வனிதா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது வனிதா பேசும் போது சிலர் இந்த படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு இது முதியோர் காதலா? என்று கலாய்க்கிறாங்க. இதில் என்ன தப்பு இருக்கிறது? என்று எனக்கு தெரியல.

40 வயது காதல்

நாங்க முதியோர் என்றால் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடிச்சவங்க எல்லாம் யாரு? அந்த படம் ஆயிரம் கோடி வசூல் அடித்திருக்கிறது. பல மடங்கு லாபம் பெற்றிருக்கிறது அப்போ அந்த படம் வெற்றி படம் இல்லையா? படம் வெளியாவதற்கு முன்பு என்ன வேணாலும் ட்ரோல் செய்துவிட்டு போங்க அதை பற்றி கவலை கிடையாது. இந்த படத்தின் கதையே 40 வயதான காதல் தம்பதிக்குள் இருக்கும் பிரச்சனைகள் பற்றி தான் கதையாக இருக்கிறது.

ஜோவிகா பதில்

பலர் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 40 வயதில் குழந்தை பிறக்கும்போது என்ன மாதிரி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்? எவ்வளவு சந்தோஷங்களை அனுபவிக்கிறார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது என்று வனிதா பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளரான ஜோவிகா பேசும் போது இந்த ஜெனரேஷனில் பலர் புது கதைகளை கொடுக்காமல் ஏன் வயதான தம்பதியின் கதைகளை கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். புதுப்புது கதைகளை சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள் ஆனாலும் 40 வயது உள்ளவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் தகுந்த மாதிரி கதை சொல்ல வேண்டும் என்று தான் நான் இந்த படத்தை ஓகே சொன்னேன் என விமர்சனங்களுக்கு ஜோவிகா பதில் கொடுத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+