50 லட்சம் அபராதம் போடுவோம்னு சொன்னாங்க! பிக் பாஸ், ரெட் கார்ட் பற்றியும் வனிதா உடைத்த ரகசியம்
சென்னை: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதில் எப்போதும் தயங்காதவர் நடிகை வனிதா விஜயகுமார். அந்த வழக்கமான ஸ்டைலிலேயே, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் குறித்து பேசும் போது, தன்னுடைய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பின்னர் வெளியேறிய அனுபவத்தை பற்றி பேசிய வனிதா, "பிக் பாஸ் வீட்டை விட்டு பல பேர் வெளியே வந்திருக்காங்க. அதுல நானும் ஒருத்தி. பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து நான் வெளியேறினேன்"
என்று கூறியுள்ளார்.

ரூ.50 லட்சம் அபராதம்
அதைத்தொடர்ந்து, அவர் சொன்ன விஷயம் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "நீங்க ரூல்ஸை ப்ரேக் செய்து வெளியே போனா, ரூ.50 லட்சம் அபராதம் கட்டணும்னு பிக் பாஸ் தரப்பில் மறைமுகமா சொன்னாங்க. நான் அதுக்கு என் லாயர் பார்த்துக்குவார்னு சொல்லிட்டு வந்துட்டேன்" என்று வனிதா கூறியுள்ளார். இந்த தகவல் உண்மையா, இல்லையா என ரசிகர்கள் விவாதத்தில் இறங்கியுள்ளனர்.
நெட்டிசன்கள் அதிர்ச்சி
வனிதாவின் இந்த பேச்சுக்கு கீழ், "இது என்னடா புது தகவலா இருக்கு?", "பிக் பாஸ் கான்ட்ராக்ட்ல இப்படி ஒரு ரூல் இருக்கா?" என்று பலரும் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 9-ல் நடந்த கார் டாஸ்க் சர்ச்சையில், விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ரெட் கார்ட் வாங்கி வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளானது. இதுகுறித்தும் வனிதா வேறு ஒரு பேட்டியில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பிக் பாஸ் கலவரம்
அந்த விவகாரம் குறித்து பேசிய வனிதா, "இப்போ பிக் பாஸ் ஒரு கேம் மாதிரி இல்ல. எல்லாம் லிமிட் தாண்டி போகுது. கை வைப்பது, தள்ளுவது எல்லாம் ஜஸ்ட் கேம் கிடையாது" என்று விமர்சித்து இருக்கிறார். குறிப்பாக பெண்கள் மீது கை வைப்பது எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஒருபுறம், கம்ருதீன் மற்றும் வி ஜே பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது சரிதான் என்று சிலர் கூற, மறுபுறம், "ப்ரொவோக் பண்ணினாங்க" என்ற ஆதரவும் எழுந்தது. இந்த நிலையில், வனிதாவின் கருத்துகள் பிக் பாஸ் நிர்வாகம் மீது மறைமுக கேள்விகளை எழுப்புவதாக அமைந்தது. "ஒரே மாதிரி ரூல்ஸ் எல்லாருக்கும் பொருந்துதா?" என்பதே ரசிகர்களின் கேள்வியாக மாறியுள்ளது.
மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விக்ரம் பற்றியும் வனிதா பேசியிருந்தார். விக்ரம் கம்ருதீன் சான்ட்ராவை மிதித்து தள்ளியதை பார்த்து கோபமாகி கெட்ட வார்த்தை பேசினார். அதை பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது என சொல்லியிருக்கிறார். இவ்வளவு சரளமாக கெட்ட வார்த்தை பேசுறாங்க என்று தோன்றியது, அதையும் லைவில் அப்படியே ஒளிபரப்பு செஞ்சுருக்காங்க.. டிஆர்பிக்காக தான் இதையெல்லாம் செய்தார்களா என்று வருத்தமும் இருக்கிறது.
ஆனால் நாங்களும் இதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருக்கிறோம். இதற்கு முன்பு நான் பலமுறை என்னுடைய நண்பர்களிடம் பேசும்போது கெட்ட வார்த்தை பேசி இருக்கிறேன் ஆனால் அந்த நிகழ்ச்சியில் நான் ஒரு இடத்தில் கூட பேசவில்லை. ஏனென்றால் அது தப்பு.. பார்க்கிறவர்களுக்கு தப்பா விஷயத்தை சொல்லிக் கொடுப்பது போல இருக்கும். எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி நம்மை கண்ட்ரோல் பண்ணிக்க வேண்டும் என்றும் வனிதா பேசியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications